Tuesday, April 20, 2010

முட்டை குழம்பு

அன்புமிக்க தோழ தோழிகளே !! உங்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கிறேன். என்னடா இவள் இத்தன நாள் எங்கே காணோமென்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் ஊருக்கு அம்மா வீட்டுக்கு சென்றபடியால் என்னால் பதிவு எழுதமுடியவில்லை. இருந்தாலும் தினமும் என்பக்கத்துக்கு வந்து சென்ற உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று எளிமையான முறையில் முட்டைக்குழம்பு வைப்பது பற்றி
இங்கே காணலாம். இந்த அவசரயுகத்தில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமையல் செய்வது கொஞ்சம் கஷ்டமானதுதான். இந்த முட்டைக்குழம்பு எளிதில் செய்துவிடலாம். சுமார் ஒரு 1/2 மணிநேரம்தான் ஆகும்.

இந்த முட்டைக்குழம்பு 2 பேர் சாப்பிடும் அளவுக்கு... வீட்டில் உள்ளவர்களை பொறுத்து அளவுகள் மாறலாம்.

தேவையான
பொருள்கள் :


முட்டை 4
வெங்காயம்
2

தக்காளி
2
மிளகாய் 3
இஞ்சி சிறிதளவு
பூடு 4 பல்
கொத்தமல்லி
இலை சிறிதளவு

கரம்
மசாலா 2 ஸ்பூன்

உப்பு
தேவையான அளவு

முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூடு, மிளகாய், மல்லி இலை, கரம் மசாலா எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் வாணலியில் பாத்திரத்தில் எண்ணை விட்டு அரைத்து வைத்தவற்றை பாத்திரத்தில் கொட்டி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.
முட்டையை உடைத்து பாத்திரத்தில் கொட்டிவிட வேண்டும். முட்டை வெந்ததும் மல்லி இலையை தூவி இறக்கிவிட வேண்டும்.


இப்போது முட்டைக்குழம்பு தயார். எளிமையா இருக்கா..

நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

உங்கள் மின்மினி.

,

18 கருத்துரைகள்:

அட இது சூப்பரா இருக்கே.

கலக்குங்க.

ஆமா கொஞ்ச நாளா ஆளையே காணோம்.

ஆஹா.. முட்டை குழ‌ம்பு ரெம்ப‌ எளிமையாக‌ இருக்கே.... செய்முறை ந‌ல்லா இருக்குங்க‌..

இடியாப்பத்திற்கு முட்டைக்குழம்பு வைப்பதானால் இந்த முறையில்தான் வைப்போம்,

ஆஹா மின்மினி வந்தாச்சா... வந்ததுமே அசத்தல்

முட்டை குழம்பு நல்லாருக்கு.. செய்து பாத்திட‌வேண்டியதுதான்.

நல்லா இருக்குங்க மின்மினி

@@@ஸாதிகா--//இடியாப்பத்திற்கு முட்டைக்குழம்பு வைப்பதானால் இந்த முறையில்தான் வைப்போம்,//

எங்க வீட்டிலும் இப்படிதான் . ஆனால் சிக்கல் சிங்காரம் குழப்பவாதி (இடியாப்பம் ) பாத்தா எஸ்கேப் .

வரும் போதே, முட்டை உடைச்சிக்கிட்டு வந்திருக்கீங்க. ஹா,ஹா,ஹா,ஹா....

சூப்பராக இருக்கின்றது முட்டை குழம்பு...அருமை...

படங்களுடன் குறிப்பு அழகு.முட்டைகுழம்பு சிம்பிளி சூப்பர்.

எங்க வீட்டிலும் இப்படிதான் . ஆனால் சிக்கல் சிங்காரம் குழப்பவாதி (இடியாப்பம் ) பாத்தா எஸ்கேப்//

ஆகா எங்க மச்சான்மாதரியா. இருந்தாலும் விடமாட்டோமுல்ல.

முட்டைக்குழம்பு சூப்பர் மின்மினி நானும் இதேமுறையிலும் செய்வேன். இன்னும் 3,4 வெரட்டியும் இருக்குல்ல அதையும் செய்வோம்..

http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html

ஓடியாந்து பாருங்க மின்மினி

வாங்க அக்பர் அண்ணே @ நான் ஊருக்கு போயிருந்தேன்., இதோ வந்தாச்சி..

வாங்க நாடோடி @ எளிய முட்டை குழம்பு செய்து பாருங்க..

வாங்க ஸாதிகா அக்கா @ எங்கம்மா வீட்டிலேயும், எங்க வீட்டிலும் இப்படித்தான் செய்வோம்.., அவருக்கு இடியாப்பத்தோடு முட்டை குழம்பு ரொம்ப பிடிக்கும். நாங்க எங்கம்மா வீட்டுக்கு போயிருக்கும்போது எங்கம்மா காலையில் இதான் செய்து கொடுப்பாங்க.. அவரு விரும்பி சாப்பிடுவார்.

வாங்க ஸ்டார்ஜன் @ வந்தாச்சி மின்மினி., செய்து சாப்பிடுங்க.

வாங்க தெய்வ சுகந்தி அக்கா @ நன்றி அக்கா பாராட்டுக்கு. தொடர்ந்து வாங்க‌

வாங்க ஜெய்லானி @ இடியாப்பத்துக்கு இவ்வளோ பயமா.. கூப்பிடுங்க மச்சியை.. நான் சொல்றேன். மச்சி ஜெய்லானி அண்ணனை மிச்சம் வைக்காம சாப்பிட சொல்லுங்க..

வாங்க சித்ரா அக்கா @ உங்களுக்கு பிடித்த பத்துபடங்கள் ரொம்ப சூப்பருங்கோ..‌

வாங்க கீதா அக்கா @ பாராட்டுக்கு நன்றிக்கா.

வாங்க ஆசியாக்கா @ பாராட்டுக்கு நன்றிக்கா..

வாங்க மலிக்கா அக்கா @ மச்சானை விடாதீங்கோ.. அட ஆமாக்கா..

நன்றி கருத்துக்கு.. உங்க பக்கத்துக்கு வந்து கருத்து எழுதியாச்சி..

முட்டை குழம்பு சூப்பராக இருக்கின்றது... அருமை... :)