Thursday, April 1, 2010

நானும் ஏப்ரல் 1ம்...

அன்புள்ள தோழிகளே!! அனைவருக்கும் ஸலாம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மின்மினி எழுதும் மடல். இன்று ஏப்ரல் 1ம்தேதி. இந்த தினத்தை பற்றிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். காலையிலே இதை பற்றிய பதிவு எழுதனுன்னு நினைத்திருந்தேன். ஆனால் வீட்டுவேலைகளினால் எழுதமுடியவில்லை.

ஏப்ரல் 1ம் தேதி வந்தாலே ஒரு ஜாலியோஜாலிதான். அதுவும் பள்ளியில் படிக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும். அடுத்தவங்கள ஏமாத்துறதுல என்னஒரு சுகம். அதுவும் 1ம்தேதி மட்டும்தான் ஏமாத்துனா ஏத்துக்கிருவாங்க. துறுதுறுவென துள்ளித்திரியும் பள்ளிநாட்களை மறக்கவேமுடியாது..

ஏப்ரல் 1ம்தேதி வந்திட்டாலே உசாரா இருக்கணும்.. யாரும் நம்மை ஏமாத்திவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருப்போம். காலையில் எழுந்தவுடன் யாரெல்லாம் நம்ம கண்ணுல படுகிறாங்களோ.. அவங்களை எப்படியும் ஏமாத்திடனும். அதேமாதிரி பசங்களெல்லாம் மைபேனா நிறைய மையை ஊற்றிக்கொண்டு பசங்க, பொண்ணுங்க, பெரியவங்க என்றபாகுபாடு இல்லாமல் வெள்ளைச்சட்டையில் மை அடிச்சிவிடுவாங்க. அதனாலே அன்னைக்கு ஒருநாளைக்கு மட்டும் பள்ளிக்கூடம் போகும்போது எல்லோரும் கலர் சட்டைதான் போட்டுட்டு போவோம்.

அதுலயும் மை அடிச்சிடுவாங்க பாவிபசங்க.. சாயங்காலம் அம்மாவிடம் திட்டுவாங்குவோம். என்கூட எங்கத்தெரு பிள்ளைகள் எல்லாம் ஒன்னாத்தான் பள்ளிக்கூடம் போவோம். மாமா உங்க சட்டையில பூரான், பல்லி சொல்லி பயங்காட்டுவோம். உம்மம்மா உன் தோட்டை, கம்மலைக் காணோம்.., ஏட்டி உன் கொலுசை காணோம்.., பஸ்ஸுல ஏறி உக்கார்ந்ததும் டிரைவரிடம் டயர் சுத்துது.., இப்படி சின்ன சின்ன விசயங்களை சொல்லி அந்த ஒருநாளைக்கு மட்டும் ஏமாத்துறது ஒரு சுகமானது.

இப்படி ஒருநாளை ஏற்பாடு செய்த முன்னோர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

உங்களுக்கும் இதுமாதிரி சம்வங்களை இன்றுநினைத்தாலும் மறக்கவே முடியாது.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி..

,

20 கருத்துரைகள்:

க‌ட‌ந்த‌கால‌ ப‌ள்ளி நினைவுக‌ள்.... நினைத்தால் சிரிப்பு தான் வ‌ருகிற‌து..

Precious Moments of childhood! :-)

//காலையிலே இதை பற்றிய பதிவு எழுதனுன்னு நினைத்திருந்தேன். ஆனால் வீட்டுவேலைகளினால் எழுதமுடியவில்லை. //

இதுக்குதான் நான் ஒரு நாள் முன்னாடியே போட்டுட்டேன். நீங்க ஏமாந்ததை எழுதலையே!!!

அப்பா பள்ளியில் எந்த ஆசிரியரும் ஏமாறாமல் மை அடிக்காமல் வெளியேறியது , இன்று மறக்க முடியாத நாள். நாம் செய்ததை இன்று செய்யக் கூடாது என நினைப்பதில் தான் என்ன முட்டாள் தினம்.

//எங்கத்தெரு பிள்ளைகள் எல்லாம் ஒன்னாத்தான் பள்ளிக்கூடம் போவோம். //

நீங்க சென்னையா? கோவையா?

க‌ட‌ந்த‌கால‌ ப‌ள்ளி நினைவுக‌ள்...
நினைவுகளில் இனிக்கும் நினைவுகள் படிக்கும் பருவத்து கலாட்டாக்கள்தானே தோழி.

அழகான குறும்புகள்.அருமையான பகிர்வு.

//பசங்களெல்லாம் மைபேனா நிறைய மையை ஊற்றிக்கொண்டு பசங்க, பொண்ணுங்க, பெரியவங்க என்றபாகுபாடு இல்லாமல் வெள்ளைச்சட்டையில் மை அடிச்சிவிடுவாங்க//

ரைட்டுங்க. பதிவுலயும் ப்ளூகலரா.. புரிஞ்சி போச்சி.:-)))

நல்ல பகிர்வு.மலரும் நினைவுகள்.

பள்ளிப்பருவ ஏப்ரல் ஒன்றை நினைக்கும் பொழுது சிரிப்பு வரும்.அன்று அட்டு பழசு ஆடைகள் தான் அணிவோம்.ஏனெனில் இங்கை தெளித்துவிடுவார்கள்.வெளியில் சென்றாலே சாயத்தைக்கரைத்துக்கொண்டுதயாராக நிற்பார்கள்.அப்ப்டி செய்து வாங்கிக்கட்டிக்கொண்டதும் உண்டு.

வாங்க நாடோடி@ உண்மையிலே அருமையான நினைவுகள்..

வாங்க சித்ரா அக்கா @ கரெக்டா சொன்னீங்க...

வாங்க ஜெரி சார் @ நன்றி

வாங்க மதுரை சரவணன் சார் @ உங்களின் பகிர்வுக்கு நன்றி

வாங்க ஜெய்லானி @ உசாரான ஆளுதான் நீங்க..

வாங்க டாக்டர் சுரேஷ் சார் @ இல்லீங்க நான் திருநெல்வேலி பக்கம்.

வாங்க சே.குமார் @ உண்மையே.. அந்த பருவத்தை என்ன விலைகொடுத்தாலும் வாங்க இயலாது.

வாங்க ராஜா சார் @ தங்கள் கருத்துக்கு நன்றி..

வாங்க அமைதிசாரல் @ கண்டுபிடிச்சிட்டீங்களே.., அப்ப நீங்க பாஸ்தான்.

வாங்க ஆசியா உமர் அக்கா @ அப்ப உள்ள பருவத்தை இப்போ நினைத்தாலும் மறக்க இயலாது.

வாங்க ஸாதிகா அக்கா @ உங்கள் நினைவும் அருமை அக்கா..

அம்மா!,
ஆண் பதிவர்களில் சீனியர் ( வயதில் தான்)என்ற முறையில் தங்கள் பதிவு " அன்புள்ள தோழிகளே!!" என் துவங்கப்பட்டிருப்பதற்கு ஆட்சேபணையை தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் எங்கள் ஆண்கள் வர்க்கம் இதை பொருட்படுத்தாது, உங்கள் தோழிகளின் பின்னுட்ட்த்தை விட அதிகமாக போட்டிருக்கிறார்கள்.
நானும் திருநெல்வேலிகாரந்தான்.

ரொம்ப கலகலப்பாய் இருக்கிறது.

வாங்க திரவிய நடராஜன் சார் @ சுட்டிக்காட்டியதுக்கு மிக்க நன்றி.. அட நீங்க நம்மூரா தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சார்.

வாங்க நிஜாமுதீன் @ பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

வாங்க அபு அஃப்ஸர் @ பாராட்டுக்கு ரொம்ப நன்றி

திராவிய நட்ராஜன் சொல்வது சரியே

அதுக்கு தான் மைக்க பிடிச்சி பேசுவது போல், பதிவுலக தோழ தோழியர்களே என்று ஆரம்பிக்கனும். ஒகே மின்மினி..

சும்மா தான் ஒரு லுலுலாய்க்கு''
பள்ளி பருவம் ஆஹா அதை நினைக்கும் போது ரொம்ப நல்ல இருக்கும்.

அழகான பள்ளி நாட்களின் நினைவை கிண்டுனதுக்கு ரொம்ப நன்றி... இப்போ கூட யாருக்காவதும் மை அடிக்கணும் போல இருக்கு.... திருப்பி அடிக்காம இருக்கணுமே (மைல இல்ல கைல) ஹி ஹி....