அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நோன்பு இப்போதான் ஆரம்பித்தமாதிரி இருந்தது... அதற்குள் இந்த ரமலான் மாதம் இன்னும் இரண்டு தினங்களில் முடியப்போகிறது. நோன்பு கஞ்சி வைக்க ரொம்ப நாளா ஆசை. அதுபற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.. அப்போ
என் மாமி, பரவாயில்ல.. நீ நோன்பு கஞ்சி செய்.. நானும் எனக்கு தெரிந்தஅளவுக்கு சொல்லித் தருகிறேன் என்று சொல்லி கஞ்சி செய்ய சொல்லித் தந்தார்.
நோன்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
மிளகாய் 1
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பூண்டு 4
சீரகம் 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
பால் 2 கரண்டி
அண்டிப்பருப்பு சிறிதளவு
மேகி மசாலா 1 பாக்கெட்
மல்லிக்கீரை சிறிதளவு..
புதீனா 1 இணுக்கு
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் 2 ஸ்பூன்
முதலில் பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு அரிசி உடைந்து துகள்களாக ஆகுமளவுக்கு பொடித்து ஒரு 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அரிசியை போடவேண்டும்.
2ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம், வெந்தயம், நசுக்கிய முழுபூண்டு, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்துப்போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
தண்ணீர் வற்றவற்ற தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்னர் மிளகாய், தக்காளி, மேகி மசாலா, பால், மல்லிப்புதினா, அண்டிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.தண்ணீர் வற்றவற்ற தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கஞ்சி நன்றாக கெட்டியாக வந்ததும் இறக்கி ஆறவைக்க வேண்டும்.
இப்போது சுவையான கஞ்சி ரெடி..
இதற்கு சுவையாக தொட்டுக்க தேங்காய்ச் சட்டினி அல்லது தக்காளி சட்டினி தயார் செய்து நோன்பு திறக்கலாம்.
******************
வெங்காய வடை தயார் செய்ய தேவையான பொருட்கள்..
பல்லாரி வெங்காயம் 3மிளகாய் 1
முட்டை 1
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
மல்லிக்கீரை சிறிதளவு
சோடாஉப்பு அரைக்கால் சிறிய ஸ்பூன்.. சிறிதளவிலும் சிறிதளவு.. கூடிவிடக்கூடாது.. பின்ன, வடை கல்லுமாதிரி ஆகிடும்.கடலை மாவு தேவையான அளவு
உப்பு சிறிதளவு..ஒரு கிண்ணத்தில் வெங்காயத்தை பொடியாக ஆம்லேட்டுக்கு நறுக்குவதுபோல நறுக்கிவைத்துக் கொள்ளவேண்டும்.
மிளகாய், மல்லிக்கீரையை பொடியாக நறுக்கி முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் சேர்க்க வேண்டும்.
இஞ்சிப்பூண்டு பேஸ்ட், உப்பு, சோடாஉப்பை தூவி மாவைக் கொட்டி பிசைய வேண்டும்.
கலவையை மாவுபக்குவமாக்கிக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய்விட்டு மாவுக்கலவையை சிறிதுசிறிதாக போட்டு பொறித்து வைக்கவேண்டும்.
சுவையான வெங்காய வடை ரெடி..
எல்லோருக்கும் என் இனிய ரமலான் வாழ்த்துகள்..
,
15 கருத்துரைகள்:
//அண்டிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.//
தேவையான லிஸ்டில இல்லையே..!!
அப்புறம் நீங்க கஞ்சில மட்டன் அல்லது ,கீமா போட மாட்டீங்களா..?
இண்ட்லி பிரச்சனை போலிருக்கு யாருக்கும் ஓட்டு விழ மாட்டேங்கிறது .:-(
ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து.ரெசிப்பி பார்க்க அருமை.
vadai super... thanks for sharing the recipe
அட இரண்டுமே நல்லா இருக்கே.
படங்களை வெளிச்சத்தில் எடுத்தால் இன்னும் நல்லாயிருக்கும்.
மின்மினி.. அருமையா கஞ்சி செய்திருக்கீங்க.. பார்க்க ரொம்ப நல்லாருக்கு..
வடை ரொம்ப நல்லாருக்கு... தொடருங்கள்..
மின்மினி.. அருமையா கஞ்சி செய்திருக்கீங்க.. பார்க்க ரொம்ப நல்லாருக்கு..!
Kanchi & vadai looks perfect!! Happy Ramzan!!
Looks so good! Thank you for the recipes
வா அலைக்கும் அஸ்ஸ்லாம் நோன்பு பிஸியா மின்மினி
ரொம்ப நாள் கழித்து ஈசி அண்ட் சிம்பில் கஞ்சி வடை அருமை
Happy Ramzan
கஞ்சி சூப்பர் மின்மினி.
எங்க பக்கம் வரதில்லை,என்ன ஆளையே கனோம் ரொம்ப நாளாச்சு.
நலம் நல்மறிய ஆவல்.
//என் மாமி, பரவாயில்ல.. நீ நோன்பு கஞ்சி செய்.. நானும் எனக்கு தெரிந்தஅளவுக்கு சொல்லித் தருகிறேன் என்று சொல்லி கஞ்சி செய்ய சொல்லித் தந்தார்.//
பரவா இல்லை, அடுப்படியில் மாமி மருமகள் ஒற்றுமையைக் கண்டு வியப்படைந்தேன்
அருமையான கஞ்சி வடை. நோன்புக்கு மிகப் பிரமாதம்.
ஈத் பெருநாள் வாழ்த்துகள்!!
மசாலா குறைந்த கஞ்சி..வித்தியாசமாக இருக்கின்றது மின்மினி
முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்.
Post a Comment