மின்மினி எழுதும் அன்பு மடல்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சி உங்களையெல்லாம் சந்தித்து ஒரு இரண்டு மாதங்களுக்கு மேலிருக்கும் என்று நினைக்கிறேன்.. எழுதவேண்டும்.. உங்களையெல்லாம் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் மட்டும் மனதில் அடிக்கடி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்ப்பது ரொம்ப அரிதாகவே இருக்கிறது.. தொடர்ந்து எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் நிறைய மருத்துவகுணங்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சேர்க்கும் பொருட்கள் நம் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதுகாத்து உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
சாதாரண தக்காளி ரசம் வைப்பது பற்றியும் அதில் சேர்க்கும் பொருட்களின் மருத்துவகுணங்கள் பற்றியும் இப்போது நாம் காணலாம்.
தக்காளி ரசம்
============
தேவையானவை
கடுகு உளுந்தம்பருப்பு _ சிறிதளவு 1/2 ஸ்பூன்
வெங்காயம் _ சிறிதளவு
கறிவேப்பிலை _ 2 இணுக்கு
மிளகாய் வற்றல் _ 3
தக்காளி _ 2
புளி _ சிறிதளவு
சீரகம் பெருஞ்சீரகம் _ 1/2 ஸ்பூன்
மிளகு _ 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
முதலில் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகு சீரகத்தை பொடித்து வைத்துக்கொள்ளவும்..
தாளிக்க வேண்டிய பொருட்களான கடுகு உளுந்தம்பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை மிளகாய்வற்றல் ஆகியவற்றை கருகிவிடாமல் பொன்னிறமாக தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
புளியை தண்ணீரில் கரைத்து தக்காளி கலவையுடன் சேர்த்து பொடித்த மிளகு சீரகத்தை சேர்த்து இறக்கிவிடவேண்டும்.
கடுகு _ கால்வலி, கால் உளைச்சலுக்கு நல்லது.
வெங்காயம் _ தலைவலி, ஜலதோசத்துக்கு நல்லது.
மிளகு _ வாய்ப்புத் தொல்லை நீக்கும்.
தக்காளி _ ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சீரகம், பெருஞ்சீரகம் _ உடல் உஷ்ணம் தீர்க்கும்.
புளி, உப்பு _ சுவைக்கு
அன்புடன் மின்மினி.
,
21 கருத்துரைகள்:
அருமை.சேர்த்த பொருளுக்கு மருத்துவ குணம் கொடுத்து அசத்திட்டீங்க.
ரொம்ப நன்றி ஆசியாக்கா.. முதல் வருகை தந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஆஹா.. ரசம் ரொம்ப மணக்குது மின்மினி.. தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துகள்.
வந்ததுதான் வந்தீங்க நா வெறும் ரசத்தை வச்சி என்ன பண்ண அப்படியே சோறு ஆக்குவதும் எப்படின்னு சொல்லிட்டா கொஞ்சம் நல்லது. ஹி..ஹி.. முடிஞ்சா அப்பளம் பொறீப்பது எப்படின்னு சொன்னாலும் ரொம்ப நல்லது..
ஹலோ..அடிக்கடி வந்துட்டு போங்க பிளாக் பக்கம் .நீங்க மறந்துட்டு எங்களை கேக்குறீங்க
ஸ்டார்ஜன் லெட் ஸ்டார்ட், நாளைக்கு ரசம் வைக்க வேண்டியதுதான்.
பகிர்வுக்கு நன்றி மின்மினி.
வாங்க ஸ்டார்ஜன் @ ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்
வாங்க ஜெய்லானி @ ஹா ஹா ஹா.. சோறு இப்பதான் அடுப்புல கிடக்குது.. அப்பளமும் இனிதான் பொறிக்கணும்..
//ஹலோ..அடிக்கடி வந்துட்டு போங்க பிளாக் பக்கம் .நீங்க மறந்துட்டு எங்களை கேக்குறீங்க//
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.. நான் நேரம் கிடைக்கும் நேரத்தில் எல்லோருடைய ப்ளாக்கும் வந்து படித்துவிட்டு செல்வேன். இருந்தாலும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்
வாங்க அக்பர் அண்ணே @ ஆஹா.. ஸ்டார்ஜன்னுக்கு சொல்லியாச்சா.. நாளைக்கே செய்து பார்த்திருவாரே.. ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ஆரோக்கியமான ரசம்.. கமகமனு இருக்கு தக்காளி ரசம்
ரசம் வாசனையோட புளிப்பா இருக்கு பதிவைப் பாக்கிறப்பவே !நான் மாதம் ஒருமுறைவாவது ரசம் வைத்துச் சாப்பிடுவேன் மின்மினி.நன்றி.
எங்கே ரொம்ப நாளாக் காணோம்!
//கடுகு _ கால்வலி, கால் உளைச்சலுக்கு நல்லது.
வெங்காயம் _ தலைவலி, ஜலதோசத்துக்கு நல்லது.
மிளகு _ வாய்ப்புத் தொல்லை நீக்கும்.
தக்காளி _ ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சீரகம், பெருஞ்சீரகம் _ உடல் உஷ்ணம் தீர்க்கும்.//
சேர்த்த பொருளுக்கு மருத்துவ குணம் கொடுத்து அசத்திட்டீங்க.
ஹலோ..அடிக்கடி வந்துட்டு போங்க பிளாக் பக்கம் .நீங்க மறந்துட்டு எங்களை கேக்குறீங்க
வாங்க சினேகிதி @ ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்
வாங்க ஹேமா அக்கா @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ப்ளாக் பக்கம் வருவேன்.
வாங்க கடல் திரட்டி @ ரொம்ப நன்றி.. என்னோட பதிவையும் உங்கள் திரட்டியில் இணைத்ததுக்கு..
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க குமார் அண்ணே @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு.. கண்டிப்பாக வருகை தருவேன்.
வாவ்..அருமையான ரசம்.மின்மினி அதுத்த பதிவு அந்த தொடர் பதிவுதானே?
super
tips udan thakkali rasam arumai
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html
சூப்பர் ரெசிபி..... நன்றி
வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment