Wednesday, April 7, 2010

பட்டாம்பூச்சி பறக்குது - பதின்ம நினைவுகள் தொடர் பதிவு

மலிக்கா அக்கா அவர்கள் என்னை ஒரு பதின்ம வயது நினைவுகள் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றிகள்.

இங்க பாருங்க.. கொசுவத்திய சுத்துகிறது.

எனக்கு சின்னவயசு இருக்கும்போது நாங்க தக்கலைக்கு பக்கத்தில் உள்ள ஊரில்தான் இருந்தோம். அதான் எங்கம்மா ஊரு. அங்குதான் எங்க அம்மம்மா, மாமாமார்கள் எல்லோரும் இருந்தார்கள். சொந்த ஊர்ல வீட்டு பிரச்சனை இருந்ததால் நாங்களும் அங்கு குடியிருந்தோம். அப்ப நானும் எங்கக்காவும் பக்கத்தில் இருந்த பள்ளிக்கு செல்வோம். எங்க மாமா பசங்களும் ஒன்னாத்தான் படித்தாங்க. எங்க பக்கத்துவீட்டுல உள்ள பொண்ணு என்மேல பாசமா இருப்பாள். நானும் அவளும்தான் எங்கேயும் செல்வதுண்டு. மாமா பசங்க, நான், எங்கக்கா தம்பி எல்லோரும்சேர்ந்து விளையாடுவோம். சேட்டை பண்ணுறதுல நாந்தான் முதல்ல..

நாங்க இருந்த பக்கம் மூங்கில் தோட்டங்கள் நிறைய உண்டு. ஒரு தடவை நானும் என்மாமா பொண்ணும் பள்ளிக்கு செல்லும்போது மூங்கில் தோட்டத்து வழியா செல்லும்போது மாமா பொண்ணு வழுக்கி விழுந்திட்டாள். என்னடி என்னாச்சி ஏன் பார்த்துவரக்கூடாதா என்று தூக்கும்போது அய்யோ அம்மா என்று அலறிவிட்டேன். பார்த்தால் 4 அடி பாம்பு ஒன்று கீழே படம் எடுத்து இருந்தது. அப்போது அந்த வழியா போனவர் எங்கமாமாவுக்கு தெரிந்தவர். உடனே அவர் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அதன் தலையில் ஓங்கிஒரு போடு போட்டார். அதற்குள் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடிவந்து எங்களை காப்பாற்றிவிட்டனர்.

அங்கே தான் ஐந்தாம்வகுப்பு வரை படித்தேன். அந்த ஸ்கூல்ல மலையாளம் கத்துக்கொடுத்தார்கள். எனக்கு மலையாளம் ஓரளவுக்கு எழுதபடிக்க தெரியும். இதை என்கணவரிடம் சொன்னேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். கல்ப்பில் இருப்பதால் என்கணவருக்கும் மலையாளம் தெரியும்.

பின்னர் சொந்த ஊருக்கே சென்றுவிட்டோம். அங்கு சென்றதும் என்சேட்டைகளை விட்டபாடில்லை. பாட்ஷா அப்பா தோட்டத்துக்கு சென்று விளையாடுவது பிடித்தமான ஒன்று.

எங்க தெருவில் இருக்கும் ஆபிதா ஜன்னத் இவர்கள்தான் என்னுயிர்தோழிகள். என் அக்கா அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தாள். நானோ எங்க வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெண்கள் பள்ளியில் படித்தேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படிக்கும் தோழி ரொம்ப நல்லாப்படிப்பாள். நல்ல பொண்ணு.., அவள் ஒரு பையனை காதலித்தாள். அவனும் காதலிப்பாதாக சொல்லியிருந்தானாம். எனக்கு சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அவனுக்கு அவங்க வீட்டில பொண்ணு பாத்திருக்காங்க. இவன் தன்காதலை பற்றி வீட்டில் தெரியப்படுத்தவில்லை. இவள் கேட்டதுக்கு எங்கம்மா பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் கட்டிக்கிவேன்., என்று என் தோழியை மறந்து விட்டான் படுபாவி.

இவள் மனம் ஆற்றாமல் தற்கொலை செய்து கொண்டாள். எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. பணக்காரபெண் கிடைத்தவுடன் என்தோழியை மறந்த அவனெல்லாம் ஒரு மனுசனா.. என்னால் இந்த சோகத்தை மறக்கமுடியவில்லை. இந்த சோகவடு மறைய சிறிதுகாலம் ஆனது.

பின்னர் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. கணக்கு பரிட்சை அன்று அவசரத்தில் ஹால்டிக்கெட் வீட்டில் மறந்துவிட்டேன். டீச்சர் ஹால்டிக்கெட் கொண்டுவந்தால்தான் உள்ளே விடுவேன் என்று கறாராக சொல்லிவிட்டார்கள். பக்கத்துல வீடு இருந்தால் எடுத்துட்டு வந்திடலாம்; ரொம்ப தொலைவு. நடக்ககூடிய காரியமா.. டீச்சரிடம் நிலைமையை விளக்கியும் உள்ளே விடவில்லை. எனக்கு ஒன்றும் தோன்ற‌வில்லை. டீச்சர் கொஞ்சம் தள்ளி சென்றதும், தைரியத்துடன் என் இருக்கையைத்தேடி போய் உக்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். டீச்சர் கவனிக்கவில்லை.

பின்னர் டீச்சர் செக்பண்ண வரும்போது உன்னை ஹால்டிக்கட் எடுத்துவர அனுப்பினேனே.., ஆமா டீச்சர் நான் அப்போதே வந்திட்டேனே என்றேன். ஆம் சரி என்று சென்றுவிட்டார். நல்ல வேளை டீச்சர் ஹால்டிக்கெட் செக் பண்ணவே இல்லை. நானும் நல்லபடியாக தேர்வு எழுதி முடித்தேன்.

சிறுவயது ஞாபகங்களை நினைத்து பார்க்கும்போது உள்ள சுகமே தனிதான். கல்யாணமான புதிதில் மறுவீட்டு அழைப்புக்கு எங்கம்மா ஊருக்கு அவருடன் சென்று நான் சிறுவயதில் சுற்றித் திரிந்த இடங்களையும் குறும்பு செய்ததையும் நினைத்து பார்த்தேன். மிக அருமையான நினைவுகளை கணவருடன் பகிர்ந்து கொண்டது மிகுந்த சந்தோசமாக இருந்தது. இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சந்தோசமாக உள்ளது தெரியுமா..

இந்த தொடரை எழுத அழைத்த மலிக்கா அக்காவுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் மின்மினி.

22 கருத்துரைகள்:

//நாங்க தக்கலைக்கு பக்கத்தில் உள்ள ஊரில்தான் இருந்தோம்.///

இப்ப‌டி மொட்டையா சொன்னா எப்ப‌டி... த‌க்க‌லை ப‌க்க‌த்தில் எந்த‌ ஊரு?...திருவிதாங்கோடு தானே!!!!!!!!!!!!

கொசுவத்தி நல்லா சுற்றிவிட்டீர்கள்.
பாம்பு மேட்டர் பகீர்

உங்கள் இறந்து போன தோழி மேட்டர் "த்சோ"

ஹால்டொக்கஎட் மேட்டர் அட்றா சக்கை

மறுவீட்டுக்கு போன போது மகிழ்ச்சி.

மொத்தத்தில் கொசுவத்தி சுவாரஸ்யம்.

//சிறுவயது ஞாபகங்களை நினைத்து பார்க்கும்போது உள்ள சுகமே தனிதான்//

உண்மை தாங்க.

மனதை கலங்க வைக்கும் நிகழ்ச்சியில் இருந்து, டீச்சருக்கு டிமிக்கி கொடுத்த நிகழ்ச்சி வரை சொல்லி அசத்திட்டீங்க.

அருமையான பகிர்வு,

சோகம், அதிர்ச்சி, சந்தோசம், திகில் என்று கல்ந்து கட்டி கொடுத்தது அருமை.

அருமை அருமை..

கில்லாடியான ஆளுதான்., டீச்சருக்கே கல்தாவா.. ரொம்ப சூப்பர். அசத்துறீங்க மின்மினி.
பசுமையான பள்ளி ஞாபகங்களை மறக்கமுடியாது. உண்மைதான்.

மின்மினி பதின் வயது அனுபவங்களை அருமையாக விவரித்தது சூப்பர்.

அழப்பைஏற்று அழகாய் சிறுவயது நினைவுகளை சொன்னவிதம் அருமை

படுபாவி போயிட்டுபோறான்.

அந்த டீச்சர நான் பாக்கனுமே.
ரொம்ப நல்லவங்க.

கொசுவத்தி சுத்தியது சூப்பரப்பூஊஊஊஉ

ஹால் டிக்கட் - டென்ஷனாகாம, தைரியாம இருந்திருக்கீங்க, சந்தோஷம்.

//இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சந்தோசமாக உள்ளது தெரியுமா..//

எங்களுக்கும்தான் சந்தோஷம்

அருமையான பகிர்வு!!

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########

சிறுவயது ஞாபகங்களுக்கு மட்டும் வயதே ஆவதில்லைங்க...

நல்லா சொன்னீங்க.... அருமை.

வாங்க நாடோடி சார் @ ஆமா கரெக்டா சொல்லிட்டீங்க.,

வாங்க ஸாதிகா அக்கா @ உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கும் மிக்க நன்றி

வாங்க மகராசன் சார் @ ஆமா சார் ரொம்ப உண்மை.

வாங்க சித்ரா அக்கா @ நன்றி அக்கா.

வாங்க அக்பர் அண்ணா @ மிக்க மகிழ்ச்சி நல்லா சொல்லிருக்கீங்க.

வாங்க ஸ்டார்ஜன் @ உங்கள் கருத்துக்கு நன்றி

வாங்க ஆசியாக்கா @ மிக்க மகிழ்ச்சி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு.

வாங்க மலிக்கா அக்கா @ என்னை எழுத வைத்ததே நீங்கதானே.., மிக்க மகிழ்ச்சி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு.

வாங்க ஹூசைனம்மா @ உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி., தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாங்க அபுஅஃப்ஸர் @ மிக்க மகிழ்ச்சி.

வாங்க மேனகா அக்கா @ நன்றி அக்கா

வாங்க அக்பர் அண்ணே @ நன்றி விருதுக்கு..

வாங்க ஜெய்லானி @ நன்றி விருதுக்கு..

வாங்க குமார் @ நன்றிகள் பாராட்டுக்கு.

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

என்ன அடுத்ததை காணோம் சீக்கிரம் சீக்கிரம்.

சிறு வயது கொசுவர்த்தி நல்ல இருக்கு,

பாம்பா பே பே

உங்கள் தோழி மரணம் ரொம்பவே வருத்தம்.

ஹால் டிக்கெட் , கில்லாடி தான் டீச்சருக்கே ஹல்வா வா.

minimini ரொம்ப நாளைக்கு பின் வந்து இங்கு பார்த்த நல்லா இருக்கு.
சூப்பர் உங்க கதை (சந்தோஷம்+சோகம்+சாமார்த்தியம்) எல்லாம் கலந்த பசுமையான பதிவு.

அப்ப மோளிடத்தில் இனி மலையாளத்தில் சம்சாரிக்காம். ம். எனிக்கு ஒரு நல்ல கூட்டுகாரிகிட்டி.
நிங்களு மலையாள பாட்டு ஒக்கே கேட்குமோ.
எனக்கு வளரே சந்தோஷமாயி. மோள் இப்ப எவிடேயா தாமஸிக்குந்து?