Thursday, May 27, 2010

பஸ் பயணம் - கவனிக்க

நானும் என்கணவரும் அம்மம்மா வீட்டுக்கு விருந்துக்கு தக்கலைக்கு அருகில் உள்ள ஊருக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து காலையில் 7 மணிக்கே கிளம்பினாலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வருவதற்குள் எட்டுமணியாகிவிட்டது. பின்னர் அங்கிருந்த சிற்றுண்டி கடையில் சாப்பிட்டோம். சாவகாசமா நாகர்கோவில் பிளாட்பாரத்துக்கு வந்துப்பார்த்தால் கூட்டம் அலைமோதியது. என்னவென்று விசாரித்ததில் பணகுடியில் கோவில் கொடைவிழாவானதால் பஸ்கள் நிரம்பி வழிந்தன.

9.30 மணி தாண்டியும் கூட்டம் அதிகமானதே தவிர குறையவே இல்லை. என்கணவர் போறபோக்கை பார்த்தால் கூட்டம்குறைய வாய்ப்பில்லை. நாம் ஏறிக்கொள்வோம். என்று சொல்லி கூட்டத்தோடு கூட்டமாக ஏறிவிட்டோம். உட்கார இடம் இல்லை. நின்றுகொண்டே வந்தோம். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு 25 ரூபாய். பஸ் வேகமாக சென்றாலாவது நிற்கும் பீலீங் வராது. ஆனால் பஸ்ஸோ வெகுமெதுவாக சென்றது எரிச்சலாக இருந்தது. நான் வள்ளியூர் வந்ததும் இடம்கிடைத்து உட்கார்ந்தேன். என்கணவரோ ஆரல்வாய்மொழி வந்ததும்தான் உட்கார்ந்தார்.

தொலைதூரம் செல்ப‌வர்களை முதலில் உட்காரவைத்துவிட்டு பின்னர் மற்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்கலாம். அல்லது இதுபோல‌ திருவிழா என்றால் அந்தஊருக்கு தனிபஸ் விடலாம். இதனால் தொலைதூரம் செல்பவர்கள் சிரமமில்லாமல் பயணிக்கலாம். போக்குவரத்துக் கழகங்கள், வசூல் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி பயணிகளை அலைக்கழிக்கிறாங்களே.. கூடுதல் பஸ்கள் இயக்கினால் பயணிகளுக்கு சிரமமிருக்காது.

***********************************

ஒருதடவை எங்கஊருக்கு சென்றுவிட்டு திருநெல்வேலிக்கு திரும்ப‌ பஸ்கிடைக்கவில்லை. அப்போது சென்னை செல்லும் விரைவுபோக்குவரத்து கழக பஸ் வந்தது. எங்கவாப்பா நீங்க இரண்டுபேரும் இந்தபஸ்ல போங்க. வேற பஸ் கிடைக்கிறமாதிரி தெரியவில்லை என்று சென்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அந்தபஸ் சொகுசுபேருந்து என்பதால் எந்த அசௌகரியமில்லாமல் இனிய பயணமாக இருந்தது.

நாங்கள் வந்தபஸ் திருசெந்தூரிலிருந்து நெல்லை வழியாக சென்னைக்கு செல்வதால் டீசல்போட நெல்லை டிப்போவுக்குள் சென்றது. அந்தசமயம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னை செல்லும் பஸ் டிப்போவுக்குள் நுழைந்தது. அப்போது அந்த டிப்போ ஊழியர் அந்தபஸ் டிரைவரிடம்,
"எப்பா டாப்புல எதாவது லக்கேஜ் வச்சிருக்கீயா"
"இல்லியே அண்ணே எதுவும் சாமான் இல்லையே"
"அப்படியா மேல எதோ இருக்கிறமாதிரி தெரியுதே"
அப்படியா அண்ணே என்றவாறு டிரைவரும் சிலஆட்களும் மேலே ஏறிப்பார்த்தால் ஒரு பத்து பதிமூன்று வயதில் ஒரு சிறுவன் கம்பியை பிடித்தபடி பம்மிபோய் படுத்துகிடந்தான்.

உடனே எல்லோரும் சேர்ந்து அவனை கீழே இற்க்கினர். கூட்டம் கூடிவிட்டது என்கணவர் உட்பட எல்லோரும் அந்தபையனை சூழ்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தனர். நான் பஸ்ஸில் இருந்தவாறே வேடிக்கை பார்த்தேன்.

விசாரித்ததில் அவன், அவங்க அம்மா அவனை அடித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறானாம். உடனே அந்தபஸ் டிரைவர் அட பாவிப்பயலே எங்கேயிருந்துல ஏறினே?. அவன் மார்த்தாண்டத்திலே ஏறிவிட்டானாம். எல செத்தமூதி! எப்படில்லே பஸ் டாப்புல கிடந்தே.. ரோட்டுல எத்தனை திருப்பங்கள் இருக்கு. எவ்வளவு வேகமா வந்திருப்பேன். நான் எத்தனிதடவை பிரேக் அடிச்சிருப்பேன். செத்துக்கித்து தொலைந்திருந்தேன்னா யாருல பதில் சொல்றது. என்வண்டிதான் கிடைச்சுதா.. அண்ணே உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. நல்லவேளை சொன்னீங்க.. இல்லைன்னா என்கதி என்னஆகிருக்கும். என்று டிரைவர் கண்ணீர்மல்க கூறினார்.

அவனுக்கு எல்லோரும் அறிவுரைகள் சொன்னார்கள். பின்னர் டிப்போ அதிகாரிகள், அவனது வீட்டுமுகவரி தொலைபேசி எண் கேட்டு அவனது பெற்றோரை வரவழைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் பஸ் கிளம்பியது....


டிஸ்கி: மேலே உள்ள பஸ் படத்தில் நான் கிடையாது.., கூகிளில் தேடியது.

,

23 கருத்துரைகள்:

//தொலைதூரம் செல்ப‌வர்களை முதலில் உட்காரவைத்துவிட்டு பின்னர் மற்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்கலாம்.//

அப்போ திருநெல்வேலியில் இருந்து வள்ளியூர் போறவங்க எல்லாம் நின்னுட்டு வரமும் நாகர்கோவில போறவங்க எல்லாம் உக்கார்ந்துட்டு வரனுமா?இது என்ன சர்வதிகாரதனமான பேச்சு, first come first server system தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு சரி.

payanam nandraga irunthathu

நல்ல அழகாக அனுபவத்தை எழுதிருக்கீங்க.பாராட்டுக்கள்.

//தொலைதூரம் செல்ப‌வர்களை முதலில் உட்காரவைத்துவிட்டு பின்னர் மற்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்கலாம். அல்லது இதுபோல‌ திருவிழா என்றால் அந்தஊருக்கு தனிபஸ் விடலாம். இதனால் தொலைதூரம் செல்பவர்கள் சிரமமில்லாமல் பயணிக்கலாம்.//

நல்ல கருத்து மின்மினி

நல்ல பகிர்வு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் மின்மினி.

நல்ல பகிர்வு மின்மினி.. அருமையாக சொல்லியிருக்கீங்க..

அந்த சிறுவன் இப்பொழுது பத்திரமாக இருப்பான் என்று நம்புவோம்..... ம்ம்ம்.....

நல்ல பகிர்வு!!

பகிர்வுக்கு நன்றி மின்மினி.

பயண அனுபவங்கள் பல பாடங்களை கொடுக்கின்றன.

பயணம் நல்லபடியாக அமைந்ததுக்கு வாழ்த்துகள்.

@@@Chitra--//அந்த சிறுவன் இப்பொழுது பத்திரமாக இருப்பான் என்று நம்புவோம்..... ம்ம்ம்.....//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

//தொலைதூரம் செல்ப‌வர்களை முதலில் உட்காரவைத்துவிட்டு பின்னர் மற்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்கலாம். அல்லது இதுபோல‌ திருவிழா என்றால் அந்தஊருக்கு தனிபஸ் விடலாம். இதனால் தொலைதூரம் செல்பவர்கள் சிரமமில்லாமல் பயணிக்கலாம். போக்குவரத்துக் கழகங்கள், வசூல் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி பயணிகளை அலைக்கழிக்கிறாங்களே.. கூடுதல் பஸ்கள் இயக்கினால் பயணிகளுக்கு சிரமமிருக்காது.//
மேடம் எப்போதுமே நாகர்கோவில் பிளாட்பாரம் கூட்டமாத்தான் இருக்கும் . முதல் நிறுத்தம் எங்க காலேஜ் நிறுத்தம் என்பதால் தனியார் பஸ் டிரைவர் அல்லது நடத்துனர் எங்கள் கல்லூரி மாணவர்களை உட்க்கார விட மாட்டாங்க ,இடம் இல்லாமல் பயணிகள் அடுத்த பஸ் போய்டுவாங்க என்று அவர்களுக்குள் பயம் . அதனாலேயே நாங்கள் பார்க்க இடம் இருந்தாலும் பஸ் கிளம்போதே ஏறுவதும் வாடிக்கை.திருவிழா என்று இல்லை அது எப்போதுமே அப்படிதான் இருக்கும் . நாகர்கோவில் பஸ் வரும்போதே எல்லோரும் ஏறி இடம் பிடிச்சுடுவாங்க . வயதானவங்கதான் பாவம் .

அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் மின்மினி.இளமைவிகடனில் தேர்வானதிற்கு வாழ்த்துக்கள்

வாங்க எல்கே முத்தான முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

//sathish said...

அப்போ திருநெல்வேலியில் இருந்து வள்ளியூர் போறவங்க எல்லாம் நின்னுட்டு வரமும் நாகர்கோவில போறவங்க எல்லாம் உக்கார்ந்துட்டு வரனுமா?இது என்ன சர்வதிகாரதனமான பேச்சு, first come first server system தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு சரி.//

ஒவ்வொருவரின் கருத்தும் ஏற்புடையதே.. நான் சொல்லவந்தது வேற விசயம். உங்க பார்வையில் இருந்து பார்த்தால் நீங்க சொன்னது சரிதான். ஆனா பொதுவிலிருந்து பார்க்கணும்.

வாங்க ஆசியாக்கா @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

வாங்க மகராசன் சார் @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

வாங்க சரவணகுமார் @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

வாங்க ஸ்டார்ஜன் @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

வாங்க சித்ராக்கா @ ஆமாக்கா இப்போது அந்த பையன் நலமாக இருப்பான் என்று நினைக்கிறேன்.

வாங்க மேனகா அக்கா @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

வாங்க அக்பர் அண்ணே @ ஆமா அண்ணா.. நீங்க சொல்வதுபோல பயணங்கள் பலபாடங்களை கத்துக் கொடுக்கிறது.

வாங்க கட்டபொம்மன் @ நன்றி சார்

வாங்க ராமலட்சுமி அக்கா @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

வாங்க ஜெய்லானி @ ஆமா இப்போது நலமுடன் இருப்பான் என்று நினைக்கிறேன்.

வாங்க மதார் அக்கா @ நீங்க சொல்வது சரிதான்.

வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது; உங்களுடைய வாழ்த்துகளும் பாராட்டும் என்னை கவர்ந்தது. ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா.

மின்மினி என்ன இப்படி திடிர்னு அக்கானு சொல்லிட்டீங்க , நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க . Just 24 only

அழகான விவரிப்பு...பகிர்வுக்கு நன்றீ.. வாழ்த்துக்கள்

விகடன்ல செலக்ட் ஆகிட்டீங்க இல்ல இனி தொடர் வெற்றிதான்