Sunday, March 28, 2010

உடனடி வெள்ளானம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்புமிக்க தோழிகளே!! நண்பர்களே !!

சமையல் கலை என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த அவசர யுகத்தில் எளிதாக செய்யக்கூடிய வெள்ளாணம் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம். இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

தேங்காய் ‍‍‍சிறிதளவு
வெங்காயம் பல்லாரி ‍_ 2 ( தாளிப்பதற்கும் சேர்த்து )
தக்காளி 2
சீரகம் சிறிதளவு
புளி சிறிதளவு
மிளகாய் 3
மஞ்சள்தூள் 1/4 சிறிய ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு தாளிக்க
கறிவேப்பிலை தாளிக்க‌
மிளகாய் வற்றல் தாளிக்க‌
உப்பு தேவையான அளவு

முதலில் தேங்காய், சீரகம், புளி, தக்காளி, மஞ்சள்தூள் இவற்றையெல்லாம் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலியில் சிறிதளவு எண்ணைவிட்டு தாளிக்க வேண்டிய பொருள்களான கடுகு உளுந்தம்பருப்பு வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்வற்றல், தாளித்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அரைத்த விழுதுவை தாளித்த பாத்திரத்தில்விட்டு உப்பு சேர்த்து லேசாக சூடுகாட்டினால் (கொதித்து விடக்கூடாது) சுவையான வெள்ளாணம் தயார்.

இதனுடன் ஏதாவது பொறியல் கூட்டு வைத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையான மதிய உணவு ரெடி.

நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி.


,

38 கருத்துரைகள்:

வாங்க மின்மினி, மின்னலாய் தாங்கள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொடுக்க வாழ்த்துக்கள்

நல்லா நல்லதா எழுதுங்க‌

"வெள்ளாணம்"
அப்படினா என்னது புரியல

நல்ல எளிமையான, கண்ணை உறுத்தாத டெம்ப்ளேட். முதல்லயே கவிதை, இப்ப சமையல்னு கலக்கல் ஆரம்பம். நல்லா எழுதுறீங்க; மாஷா அல்லாஹ், தொடர்ந்து எழுதுங்க.

வெள்ளானம் - நாகர்கோவிலா நீங்க? அங்கயும் இது செய்வாங்க, தக்காளி இல்லாம.

இது என்ன காரக் குழம்பு போலவா?

பெயரைப்பார்த்தால் இஸ்லாமியசமையல் போல் உள்ளது.ஆனால் நான் கேள்விப்பட்டதில்லை மின்மினி.(பெயர் அழகோ அழகு)

செய்து பார்க்க வேண்டியதுதான்.

மிக அருமை.

அருமை அருமையான எளியமுறையில் விளக்கம். எளிய உணவு.

செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

வெள்ளானம்.. இப்ப தான் கேள்விப்படுறேன்..:-)

'உடனடி வெள்ளானம்' உடனடியாகச் செய்து,
உடனடியாகச் சாப்பிட்டால், சாப்பாடு
உடனடியாக காலியாயிடும்போலிருக்குதே!

வெள்ளாணம் கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் அதில் புளியும் சேர்த்து அரைக சொல்றீஙகளே.

இது இஸ்லாமிய சமையல் தான்.

வெள்ளானம் பெயரே புதுசாக சிம்பிளாக இருக்கே.அருமை.

மின்மினி உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்; பெற்றுக்கொள்ளவும்.

வாங்க வாங்க மின்மினி

ஆஹா செய்து சாப்பிட்டால் ருசியா இருக்கும்போல..

அருமையான டிஸ். நன்றி மின்மினி.

சீக்கிரம் செஞ்சு பார்த்திடுவோம்.

வித்தியாசமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் மின்மினி.

நாங்களும் சமையல் களத்துல இறங்குற மாதிரி "ரெசிபி"கொடுங்க.......

பேரே புதுசா இருக்குது. அசத்துங்க!!!!!!

Best wishes! Welcome to the wonderful world of BLOGGERS!

ஏங்க மின்மினி, எல்லாரையும் வாங்க, வாங்க்ன்னு கூப்பிட்டுட்டு, பதிலே சொல்லாம நீங்க காணாமப் போயிட்டீங்க?

அபு அஃப்ஸர் சார் @ நன்றி
மகராசன் சார் @ வெள்ளானம் என்பது ஒரு குழம்பு.., சாப்பிட சுவையாக இருக்கும்.
ஹூசைனம்மா அக்கா @ தங்களின் வாழ்த்துக்களுடன் என் பயணத்தை இனிதே துவங்குகின்றேன். தக்காளி இல்லாமலும் செய்யலாம்.., எனக்கு திருநெல்வேலி பக்கம்தான்.
ஸ்ரீராம். சார் @ ஆமாங்க இது காரக்குழம்பு போலத்தான்.
அண்ணாமலையான் சார் @ தங்கள் வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

வாங்க ஸாதிகா அக்கா @ தங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.., மின்மினிக்கு யோகம் ஸ்டார்ட் ஆயிடுச்சி உங்களால்.., நன்றி ஸாதிகா அக்கா.

வாங்க நிஜாமுதீன் @ நன்றி
வாங்க அக்பர் அண்ணா, சாப்பிட்டுட்டு சொல்லுங்க..
வாங்க ஸ்டார்ஜன் @ சாப்பிட்டுட்டு சொல்லுங்க..
வாங்க தமிழ்பிரியன் @ புதுசுதான் செய்து சாப்பிட்டுட்டு சொல்லுங்க..
வாங்க நிஜாமுதீன் அண்ணா @ உடனடியா செய்து சாப்பிடுங்க.. :)))
வாங்க ஜலீலா அக்கா @ இதுல புளி கரைசலை சேர்க்கும்போது சுவை ரொம்ப அருமையா இருக்கும் .., நீங்க சொல்வது சரிதான்.., இஸ்லாமிய ச்மையல்தான்.

வாங்க ஆசியா அக்கா @ இதை செய்வதும் ரொம்ப ஈஸிதான்.
வாங்க ஸ்டார்ஜன் @ உங்களுக்கு எப்படி நன்றி சொவதென்றே தெரியவில்லை.., வந்த முதல் நாளே என்னை ஊக்குவித்து விருது வழங்கி இருக்கீங்க்..
வாங்க கட்டபொம்மன் @ ஆ!! என்னஇது மன்னர் கட்டபொம்மனா!! வாங்க வாங்க மன்னா வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
வாங்க துபாய் ராஜா சார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெரி சார் @ செய்து சாப்பிட்டுட்டு சொல்லுங்க..
வாங்க சித்ரா அக்கா @ தங்களின் வாழ்த்துக்களோடு தொடர்கிறேன் உங்கள் மின்மினி.
வாங்க தெய்வசுகந்தி அக்கா @ தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி.., தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.

வாங்க ஹூசைனம்மா அக்கா @ வந்த முதல்நாளே உங்கள் ஆதரவை தந்து வாழ்த்துக்களை தெரிவித்த உங்களுக்கு எப்படி நன்றிகள் சொல்வதென்றே தெரியல.., மன்னிச்சிகோங்க அக்கா.. வீட்டுல கொஞ்சம் வேலை இருந்ததினால் பதில் எழுத முடியவில்லை. தொடர்ந்து தொடர்பில் இருப்போம் அக்கா..

ஹுஸைனம்மா said...

//வெள்ளானம் - நாகர்கோவிலா நீங்க? அங்கயும் இது செய்வாங்க, தக்காளி இல்லாம.//

க‌ரெக்டா தான் சொல்லி இருக்கீங்க‌, ஆனா இதுக்கு பேர் எங்க‌ள் வீட்டில் வெற‌ங்க‌றி என்று சொல்வார்க‌ள்.. இது வ‌ழ‌க்கு சொல் ச‌ரியான‌ பேர் தெரிய‌வில்லை.

வாழ்த்துக்க‌ள் மின்மினி மேட‌ம்.. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்

ஹுஸைனம்மா said...

//வெள்ளானம் - நாகர்கோவிலா நீங்க? அங்கயும் இது செய்வாங்க, தக்காளி இல்லாம.//

க‌ரெக்டா தான் சொல்லி இருக்கீங்க‌, ஆனா இதுக்கு பேர் எங்க‌ள் வீட்டில் வெற‌ங்க‌றி என்று சொல்வார்க‌ள்.. இது வ‌ழ‌க்கு சொல் ச‌ரியான‌ பேர் தெரிய‌வில்லை.

வாழ்த்துக்க‌ள் மின்மினி மேட‌ம்.. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்

வெறங்கறி - புதுப்பேர்!! இதை தேங்காய் ஆனம், வெள்ளக்கறின்னு சொல்றதுண்டு.

பூவுன்னுஞ் சொல்லலாம், புப்பம்னுஞ் சொல்லலாம் - இதுவும் கன்னியாகுமரி வழக்குதான்!!

// ஹுஸைனம்மா said...
வெறங்கறி - புதுப்பேர்!! இதை தேங்காய் ஆனம், வெள்ளக்கறின்னு சொல்றதுண்டு.

பூவுன்னுஞ் சொல்லலாம், புப்பம்னுஞ் சொல்லலாம் - இதுவும் கன்னியாகுமரி வழக்குதான்!!//

நாஞ்சில் த‌ல‌க்கு ப‌ல்பு கொடுக்கிற‌து போல‌ த‌ருவீங்க‌! என்று நினைச்சி தான் பின்னூட்ட‌ம் போட்டேன்.. ஆனா ப‌ர‌வாயில்லை.. ந‌டைமுறை பெய‌ர்க‌ளை அள்ளி(சொல்லி) கொடுத்த‌ற்கு ந‌ன்றி..

//வெள்ளக்கறின்னு சொல்றதுண்டு//

ஒரு வேளை வெள்ள‌க்க‌றி ம‌ருவி வெறுங்க‌றி என்று ஆகி விட்ட‌தோ!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பெயர்க்காரணங்கள்:

ஒண்ணும் போடாத வெறும் குழம்பு - வெறங்கறி

காரம் இல்லாமல், கிட்டத்தட்ட வெள்ளை நிறமாக இருப்பதால் அல்லது வெள்ளம் (தண்ணீர்) போல் சுவைகுறைந்து இருப்பதால் - வெள்ளைக்கறி, வெள்ளானம்

தேங்காய் (மட்டுமே) நிறையப் போடுவதால் - தேங்காய் ஆனம்!!

போதுமா நாடோடி???

ஏங்க இப்படி படுத்துறீங்க? பிரதாப்பு பரவால்ல போல!! ஒரு குழம்புக்குப் போய் இப்படி ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வக்கிறீங்களே? இந்தக் குழம்பு எனக்கு கல்யாணமாகி நாகர்கோவில் வந்தப்புறம்தான் அறிமுகம், போதுமா!!

இதுக்குமேலயும் பதில் எழுதுனீங்க.... !!!!

வாங்க வாங்க ஹூசைனம்மா அக்கா & நாடோடி சார்,

உங்கள் இருவர்மூலம் இந்த வெள்ளானத்துக்கு புதிய கருத்துக்களை அறிந்து கொண்டேன். தொடர்ந்து இதுபோன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸலாம் -மின்மினி

ஹுஸைனம்மா...சொன்னது போல் எங்க ஊரில் தேங்கானம் (தேங்காய் ஆனம்)என்று தான் சொல்லுவார்கள் ...

பல்லாரி தக்காளி சேர்க்கமாட்டோம்.

வாங்க மலர்

அப்படியா மலர்,, ரொம்ப சந்தோசம், தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி

மலர் உங்க ஊர் எந்த ஊர்..

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//ஹுஸைனம்மா...சொன்னது போல் எங்க ஊரில் தேங்கானம் (தேங்காய் ஆனம்)என்று தான் சொல்லுவார்கள்//

அட எங்க ஊரிலும் தான் ..

வாங்க ஜெய்லானி அண்ணே

அப்படியா ரொம்ப சந்தோசம். உங்க ஊர் எதுண்ணே..

//மின்மினி said...

வாங்க ஜெய்லானி அண்ணே

அப்படியா ரொம்ப சந்தோசம். உங்க ஊர் எதுண்ணே//

என்னை போய் அண்ணேன்னுட்டு பேர் சொல்லியே கூப்பிடுங்க அதான் மரியாதை.
ஃப்ரோபைலில் இருக்கே பாக்கலையா!! பறங்கிப்பேட்டை,..சிதம்பரம் -கடலூர் நடுவில்

அய்யயோ சாரி ஜெய்லானின்னே கூப்பிடுதேன்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.