This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, October 28, 2010

அவரைக்காய் கூட்டு

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வரஹ்).

அவரைக்காய் கூட்டு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.



தேவையான பொருட்கள்

அவரைக்காய் 1/2 கிலோ
தக்காளி 2
தேங்காய் அரை முறி
சீரகம் 2 ஸ்பூன்
வெள்ளைப்பூடு 3 அரிசி
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 2
மஞ்சள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


தாளிக்க

கடுகு, உளுந்தம்பருப்பு, கொஞ்சம் வெங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை.



தேங்காய், சீரகம், பூடு, சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அவரைக்காயை நன்றாக கழுவி அதன் முனையிலுள்ள‌ நரம்பு எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிக்க வேண்டிய பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக வதங்கியதும் அவரைக்காயை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும்.

அந்த கலவையில் மிக்ஸியில் அரைத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் தம்மில் வேக வைக்கவேண்டும்.



அவரைக்காய் வெந்ததும் கிளறிவிட்டு பரிமாறலாம்.

சுவையான அவரைக்காய் கூட்டு ரெடி. நீங்களும் செய்து சாப்பிடுங்க.

,

Wednesday, October 27, 2010

நபி மொழிகளில் சில...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இருந்து சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.

நபி மொழிகளில் சில..

1. ஸலாமைப் பரப்புவது

நீங்கள் ஈமான்கொள்ளாமல் சுவனத்தில் பிரவேசிக்கவே முடியாது. ஒருவரையொருவர் நேசிக்காமல் ஈமான்கொள்ள இயலாது. எதை செயல்படுத்தினால் நீங்கள் பரஸ்பர நேசம் கொள்வீர்களோ அதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?.. உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்.

நபிமொழி (முஸ்லிம்).

2. உடல் வேதனைக்கு நிவாரணம் தேடல்

உடலில் வேதனை ஏற்படுவதாக உணர்ந்தால் வேதனையேற்படும் இடத்தில் உமது கையை வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் கூறிவிட்டு ஏழு தடவை

أعوذ بالله وقدرته من شر ماأجد وأحاذر

அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மாஅஜிது வ உஹாதிரு.

நான் உணருகின்ற மற்றும் அஞ்சுகின்ற வேதனையை விட்டு அல்லாஹ்வைக் கொண்டு _ அவனது ஆற்றலைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

என்று ஓதுவீராக என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

3. நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தாமல் இருத்தல்.

மக்கள் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தாமல் இருக்கும் வரை நனமையிலே நீடிக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

4. கவலையோ நெருக்கடியோ ஏற்படும்போது பாதுகாப்பு தேடல்.

اللهم اني أعوذ بك من الهم والحزن ' والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال

அல்லாஹும்ம இன்னி அவூதுபிக்க மினல் ஹம்மி வல்ஹஸன் வல் அஜ்ஸி வல் கஸல் வல்புக்லி வல்ஜுப்ன் வளலயித்தைனி வகலபதிர் ரிஜால்.

இறைவா! கவலை, துயரம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என நபி (ஸல்) ஓதுவார்கள். (புகாரீ).

5. கெடுதிகளிலிருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தேடல்:

நபி (ஸல்) அவர்கள் தமது பேரக்குழந்தைகளான ஹஸன் - ஹூஸைன் (ரலி) இருவருக்கும் பாதுகாப்பு தேடும் விதமாக

أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة .

உயீதுகுமா பிகலிமாத் தில்லாஹித்தாம்மா மின்குல்லி ஷைத்தானின் வஹாம்மா வமின் குல்லி ஐனின் லாம்மா.

ஷைத்தான் மற்றும் விஷ ஜந்துக்களின் அனைத்து தீங்குகளை விட்டும், கண்திருஷ்டியின் அனைத்து பாதிப்புகளை விட்டும் அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு உங்கள் இருவருக்கும் நான் பாதுகாவல் தேடுகின்றேன் என்று ஓதுவார்கள். (புகாரீ).

,

Tuesday, October 12, 2010

தேடல்..


கண்டநாள் முதல் இன்றுவரை
தேடலில் என் கண்கள் பூத்து
போயிருக்கின்றன உன் வரவை
எண்ணி எண்ணி
மனசுக்குள் மத்தாப்பாய்..

என் கைவிரல்கள் அசைவில்
நீயிட்ட முத்தமும் உன்
அரவணைப்பும் என்னை
தாலாட்டுகின்றன..

ஓயாது உன் ஞாபகம்
புரண்டு புரண்டு படுக்கையில்
நீ பேசும் காதல் மொழியும்
என்னுடன் கொஞ்சிய‌
இரவுகளும், சொர்க்கம்
கண் முன்னே தெரிகின்றனவே..

நிஜமாய் நினைவலைகள்
வட்டமிட்டால் ஆனந்தமே..
இனிய நினைவுகளே!!
செல்லுங்கள் என் மன்னவனிடத்தில்..
அவன் வரும் நாளை
அறிந்து சொல்லுங்கள்..

,