This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, September 10, 2010

ஈத் முபாரக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று நன்றி செலுத்தும் நன்னாளான ஷவ்வால் முதல் நாள் ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.


புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..



,

Tuesday, September 7, 2010

நோன்பு கஞ்சியும் வெங்காய வடை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நோன்பு இப்போதான் ஆரம்பித்தமாதிரி இருந்தது... அதற்குள் இந்த ரமலான் மாதம் இன்னும் இரண்டு தினங்களில் முடியப்போகிறது. நோன்பு கஞ்சி வைக்க ரொம்ப நாளா ஆசை. அதுபற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.. அப்போ
என்
மாமி, பரவாயில்ல.. நீ நோன்பு கஞ்சி செய்.. நானும் எனக்கு தெரிந்தஅளவுக்கு சொல்லித் தருகிறேன் என்று சொல்லி கஞ்சி செய்ய சொல்லித் தந்தார்.

நோன்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:


பாசுமதி அரிசி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
மிளகாய் 1
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பூண்டு 4
சீரகம் 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
பால் 2 கரண்டி
அண்டிப்பருப்பு சிறிதளவு
மேகி மசாலா 1 பாக்கெட்
மல்லிக்கீரை சிறிதளவு..
புதீனா 1 இணுக்கு
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் 2 ஸ்பூன்

முதலில்
பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு அரிசி உடைந்து துகள்களாக ஆகுமளவுக்கு பொடித்து ஒரு 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அரிசியை போடவேண்டும்.

2ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம், வெந்தயம், நசுக்கிய முழுபூண்டு, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்துப்போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.

தண்ணீர்
வற்றவற்ற தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்னர் மிளகாய், தக்காளி, மேகி மசாலா, பால், மல்லிப்புதினா, அண்டிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.

தண்ணீர் வற்றவற்ற தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கஞ்சி நன்றாக கெட்டியாக வந்ததும் இறக்கி ஆறவைக்க வேண்டும்.

இப்போது சுவையான கஞ்சி ரெடி..

இதற்கு சுவையாக தொட்டுக்க தேங்காய்ச் சட்டினி அல்லது தக்காளி சட்டினி தயார் செய்து நோன்பு திறக்கலாம்.

******************

வெங்காய வடை தயார் செய்ய தேவையான பொருட்கள்..


பல்லாரி வெங்காயம் 3மிளகாய் 1
முட்டை 1
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
மல்லிக்கீரை சிறிதளவு
சோடாஉப்பு அரைக்கால் சிறிய ஸ்பூன்.. சிறிதளவிலும் சிறிதளவு.. கூடிவிடக்கூடாது.. பின்ன, வடை கல்லுமாதிரி ஆகிடும்.கடலை மாவு தேவையான அளவு
உப்பு சிறிதளவு..

ஒரு கிண்ணத்தில் வெங்காயத்தை பொடியாக ஆம்லேட்டுக்கு நறுக்குவதுபோல நறுக்கிவைத்துக் கொள்ளவேண்டும்.

மிளகாய், மல்லிக்கீரையை பொடியாக நறுக்கி முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் சேர்க்க வேண்டும்.

இஞ்சிப்பூண்டு பேஸ்ட், உப்பு, சோடாஉப்பை தூவி மாவைக் கொட்டி பிசைய வேண்டும்.

கலவையை மாவுபக்குவமாக்கிக் கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணெய்விட்டு மாவுக்கலவையை சிறிதுசிறிதாக போட்டு பொறித்து வைக்கவேண்டும்.

சுவையான வெங்காய வடை ரெடி..




எல்லோருக்கும்
என் இனிய ரமலான் வாழ்த்துகள்..

,