Saturday, April 3, 2010

கோதுமை பணியாரம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். நாம் இன்று எளிய முறையில் பணியாரம் செய்வது என்பதை பார்ப்போம்.

கோதுமையில் செய்யும் இந்த பணியாரம் ரொம்ப சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கோதுமை 2 கப்
முட்டை 1
தேங்காய் பால்
சீனி (இனிப்புக்கு ஏற்றமாதிரி)
ஏலக்காய்பொடி சிறிது 1/2 ஸ்பூன்
சோடா உப்பு சிறிதளவு
உப்பு தேவையான அளவு

தேங்காயை நன்றாக துருவி தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கோதுமை மாவில் முட்டை, தேங்காய்ப்பால், சீனி, ஏலக்காய்பொடி, சோடா உப்பு, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும். மாவு நன்றாக பதமாக இருக்கவேண்டும்.

பின்னர், வாணலியில் கடாயில் எண்ணைவிட்டு மாவை வடைக்கு தட்டுவதுபோல தட்டி பொறித்து எடுக்க வேண்டும்.

இப்போது அருமையான சுவைமிக்க கோதுமை பணியாரம் ரெடி.

நண்பர்களே!! நீங்களும் வீட்டில் எளிமையான கோதுமை பணியாரம் செய்து சாப்பிடுங்கள்.

படத்தை மேனகா அக்கா பதிவிலிருந்து சுட்டது.

உங்கள் மின்மினி.

,

36 கருத்துரைகள்:

திருத்தம்
1. துருவி = திருகி
2.வாணலியில் கடாயில் = இருப்பு சட்டியில்
3.பொறித்து = வேகவைத்து
4. பணியாரம் = பண்டம்

திருநெல்வேலி பாஷைக்கு மாற்றியுள்ளேன்

எளிமையான செய்முறை. சீக்கிரம் செஞ்சு பார்த்திடலாம்.

//படத்தை மேனகா அக்கா பதிவிலிருந்து சுட்டது.//

நீங்க பணியாரத்தை சுட்டாலும் சாப்பிட நல்லாதாங்க இருக்கும்.ஹி..ஹி..

க‌ண்டிப்பா செய்துவிட‌ வேண்டிய‌து தான்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

க‌ண்டிப்பா செய்துவிட‌ வேண்டிய‌து தான்.. ந‌ன்றி.

//படத்தை மேனகா அக்கா பதிவிலிருந்து சுட்டது//

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு

முட்டை போடாம சரியா வராதுங்களா...?

பணியாரம் நீங்க சுட்டது ,படம் எப்படி சுட்டீங்க.

வாங்க திரவியம் சார் @ தமிழ்வார்த்தைகள் அறிந்து கொண்டேன். நன்றி

வாங்க ராஜா சார் @ செய்து சாப்பிட்டுசொல்லுங்கள்.

வாங்க ஜெய்லானி @ அப்படியா.. பாராட்டுக்கு நன்றி

வாங்க நாடோடி சார் @ செய்து சாப்பிட்டுசொல்லுங்க.

வாங்க இர்ஷாத் @ பாராட்டுக்கு நன்றி

வாங்க மகராசன் சார் @ செய்து சாப்பிட்டு சொல்லுங்க..பாராட்டுக்கு நன்றி

வாங்க ஸ்ரீராம். @ முட்டை போட்டா நல்ல டேஸ்டா இருக்கும்.

வாங்க ஆசியாஅக்கா @ இது நல்ல கேள்வி.. கலாய்த்தலை தொடருங்கள்.

இட்ஸ் ஈசியா.

செஞ்சு பார்த்துடுவோம்.

super & easy.recipe. I will try next time.

முட்டைக்குப் பதிலா, கனிஞ்ச வாழைப்பழம் ரெண்டு போட்டுப் பிசைஞ்சு சுட்டு எடுங்க.

மாவு கொஞ்சம் தளர்வா இருந்தால் கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் போட்டுச் சுட்டு எடுக்கலாம்.

குழிப்பணியாரச் சட்டி இருந்தால் அதுலேயும் ஊத்திச் சுடலாம்.

படத்தை மேனகா அக்கா பதிவிலிருந்து சுட்டது.
பணியாரம், நீங்கள் சுட்டது. உண்மையை சொல்லிட்டீங்க. உங்கள் அப்ரோச் பிடிச்சிருக்கு.

தேங்காய்ப்பாலுக்குப் பதிலா தேங்காய்ப்பூ போட்டு செய்வோம். படமும் நீங்களே எடுத்துப் போடுங்க, அப்பத்தான் உங்க செய்முறையில் எப்படி இருக்குதுன்னு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும்.

நீங்க எப்ப சுட்டு படம் தரப்போகின்றீர்கள் மின்மினி?

வாங்க அக்பர் அண்ணா @ செய்து பாருங்க

வாங்க விஜிக்கா @ ரொம்ப நன்றி செய்து பாருங்க

வாங்க துளசி டீச்சர் @ நீங்க சொல்றமாதிரி செய்து பார்க்கிறேன்.
முதல்வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.., தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாங்க சித்ரா அக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

வாங்க ஹூசைனம்மா அக்கா @ நீங்க சொல்ற ஐடியாபடி செய்யமுயற்சிக்கிறேன். எங்க வீட்டுல கேமரா சரியா ஒர்க் ஆகமாட்டேங்குது. இருந்தாலும் முயற்சிக்கிறேன். ரொம்ப நன்றி ஹூசைனம்மா அக்கா.

வாங்க ஸாதிகா அக்கா @ உங்க குறும்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.., தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆஹா பணியாரம் சுவையா இருக்கும் போல செய்து சாப்பிடனும்.

//வாங்க ஹூசைனம்மா அக்கா//

அக்கான்னு சொல்ற கஷ்டமெல்லாம் வேனான்னுதானே ‘ஹுஸைனம்மா’ன்னு பேரு வச்சுகிட்டிருக்கேன்?? அப்பிடியே கூப்பிடுங்க போதும்!!

மின்மினி கோதுமை பனியாரம் சூப்பர் அதை சுட்டுபோட்டு போட்டோ எடுத்த போட்டாவை சுட்டவிதம் சூப்பரோ சூப்பர்..

பணியாரம் அருமை மின்மினி!!

என் படத்தை சுட்ட உண்மையை சொன்ன உங்களின் நேர்மைக்கு ஒரு சல்யூட்!!

மின்மினி அருமை நல்லா இருக்கும்மா

என்னங்க இந்த பொண்ணு அழகு குறிப்புக்கும் கோதுமை தான்...சாப்பிடவும் கோதுமை தான்... உண்மைய சொல்லுங்க உங்க அப்பா இல்லேன்னா ரங்கமணி கோதுமை பிசினஸ் தானே... கண்டு பிடிச்சுட்டேனே (ஆனா recipe நல்லா ஸ்வீட்ஆ தான் இருக்கு...தேங்க்ஸ்... ட்ரை பண்ணி பாத்து சொல்றேன்)

நல்லா இருக்கு மின்மினி.

வாங்க ஸ்டார் @ நன்றி

வாங்க ஹூசைனம்மா @ அப்படியே கூப்பிடுதேன். உங்கள் அன்புக்கு நன்றி

வாங்க மலிக்கா அக்கா @ நல்ல கலாய்க்கிறீங்க.. பாராட்டுக்கு நன்றி., நீங்க படம் எப்படி சுடுவீங்க.. ஹா ஹா ஹா... தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள்

வாங்க மேனகா அக்கா @ பாராட்டுக்கு நன்றி.. நான் ரொம்ப நல்ல பொண்ணு.

வாங்க தேனம்மை அம்மா @ பாராட்டுக்கு நன்றி.. தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாங்க அப்பாவி தங்கமணி @ நன்றிகள் பாராட்டுக்கு.. நல்லா கலாய்க்கிறீங்க.. நன்றி. தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாங்க அமைதிசாரல் @ பாராட்டுக்கு நன்றி

வாங்க அன்புத்தோழன் @ பாராட்டுக்கு நன்றி

வாங்க காஞ்சனா அக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மின்மினி,மொபைலில் உள்ள கேமராவில் படம் எடுத்து போடுங்க,சூப்பராக இருக்கும்.

மின்மினி மேலேயும் முட்டைக்குழம்பு பதிவு எனக்குத் தேவையானதாக இருந்தது.நன்றி தோழி.

இந்தக் கோதுமைப் பணியாரம் அம்மா செய்வா.இதற்குள் கனிந்த வாழைப்பழம் சேர்த்துக்கொள்வா.
முட்டையைத் தவிர்ப்பா சிலநேரங்களில்.வாய்ப்பன் என்று பெயரும் சொல்லுவா !

பதிவுகள் பார்த்தேன்.சிந்தனைகள் அருமை மின்மினி.