Tuesday, May 11, 2010

ஒரு கப் காப்பி கிடைக்குமா?.

அன்புள்ள தோழ தோழிகளே!! அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். இப்போது எந்தநோய் எந்தரூபத்துல வருதுன்னு யாருக்கும் தெரியாது. தினமும் புதுபுது நோய்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த காலத்துல எல்லாம் நிறைய நாட்கள் உயிரோடு இருந்திருக்காங்க. ஏன் நம்மால் அவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்கமுடியவில்லை. எல்லாம் நம்மோட உணவு பழக்கவழக்கங்கள்தான் காரணம் என்று அடித்து சொல்லலாம்.

முன்னோர்கள் சாப்பிட்டதுபோல சத்தான உணவுகளை சாப்பிடாததுக்கு நிறைய காரணங்களை சொல்லலாம். இன்றைக்கு இருக்கிற விலைவாசியினாலே நமக்கு மயக்கம் வந்துவிடுகிறது. பிறகு எப்படி?.. யாரையும் குறை சொல்லமுடியாது. அதனால் நமக்கு கிடைத்திருக்கும் கொஞ்ச வாழ்நாளில் நலமோடு வாழ்வது ரொம்ப ரொம்ப முக்கியம். ஒவ்வொரு சின்னசின்ன விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.

தினமும் காப்பி குடித்தால் புற்றுநோயும் சர்க்கரை நோயும் வராது என்று இணையத்தில் படித்தேன். அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.

“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.” என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளது.


எனவே நாம் தினமும் காப்பி குடித்தால் நல்லதென்று சொல்றாங்க. நாம் நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக.

அன்புடன் உங்கள் மின்மினி.

,

31 கருத்துரைகள்:

நல்ல தகவல் மின்மினி

பயனுள்ள தகவல் மின்மினி.

காப்பி குடிப்பது நல்லதா !
இங்க பயமுறுத்துறாங்களே மின்மினி.நல்ல தகவல்தான்.

பால் சேர்காத காப்பிக்கு என்னுடைய ஓட்டு. ஒரு நாளைக்கு ரெண்டு தடவை குடிக்காட்டி நமக்கு பொழுதே போகாது,

அப்ப இன்னும் மூனு வேலை சேத்து குடிக்க வேண்டியதுதாங்க.

சிக்கரி கலக்காத 100% காபி பற்றிதான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நம் ஊரில், முழு கப் பாலில், மூணு ஸ்பூன் சீனி போட்டு, சிக்கரி கலந்த காபி கொஞ்சம் போட்டு, குடிக்கும் காபி "பாயசம்" பற்றி அல்ல என்று நினைக்கிறேன். :-)
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

முன்னாலயே தெரியாம போச்சங்களே, வாழ்க்கையையே வீணாகிப்போச்சுங்களே.

எதையுமே அளவா சாப்பிட்டா நமக்கு அதிலுள்ள நன்மைகள் கிடைக்கும்.. டீயும் காஃபியும் கூட அப்படித்தான்.. என்ன சர்க்கரைய தான் பார்த்து சேர்க்கனும்.. காஃபிக்கு சர்க்கரையில்லாம நல்லா இருக்காது..

எங்க சாச்சி முன்னல்லாம் சிகோரி கலக்காத காஃபிய ஒரு கோப்பையில் உறிஞ்சிட்டு, கருப்பட்டிய ஒரு கடி கடிச்சுப்பாங்க.. சர்க்கரைக்கு பதிலா அப்படி குடிக்கலாம் தானே! :)

தகவல்களுக்கு நன்றி சகோதரி

ஓ....What about Tea?..

இருங்க....
.
.
அதுக்கு முன்னாடி..போயி ஒரு கப் காபி குடித்துவிட்டு வந்துவிடுகிறேன்...
.
.
.
ஓ.கே..
தகவலுக்கு நன்றி மேடம்...
( நானும் தினமும், 6 காபியாவது குடிப்பேன்..அப்பாடா.. நிம்மதி...)

நல்ல காலத்துலயே நாலுகப் காப்பி,டீ குடிக்கிற ஆளு நான். இப்போ நீங்க சொல்லிட்டீங்கல்ல... தகவலுக்கு நன்றி.

பயனுள்ள தகவல்.

வாங்க மகராசன் சார் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

வாங்க அக்பர் அண்ணா @ நன்றி நன்றி நன்றி...

வாங்க ஹேமா அக்கா @ ஆமா காப்பி குடித்தால் நல்லதுன்னு சொல்றாங்க.

வாங்க ஜெய்லானி @ நன்றி ஜெய்லானி

வாங்க சித்ரா அக்கா @ ஆமா கரெக்டா சொல்லிட்டீங்க.. இதுக்குதான் சித்ரா அக்கா வேணுன்னு சொல்றது.

வாங்க டாக்டர் கந்தசாமி சார் @ இப்பவாவது தெரிஞ்சிதே. கவலை வேண்டாம்.

வாங்க நாஸியா @ கரெக்டா சொன்னீங்க.. நன்றி நாஸியா..

வாங்க பட்டாபட்டி @ நன்றி பட்டாபட்டி.. ஆமா அதென்ன பட்டாபட்டி?..

வாங்க அமைதிசாரல் அண்ணே @ நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

வாங்க ஸாதிகா அக்கா @ நன்றி அக்கா பாராட்டுக்கு..

நல்ல தகவல்

ரொம்ப சரி. நாமளும் டீயை விட்டு காபிக்கு மாறிட வேண்டியது தான். தகவலுக்கு ரொம்ப நன்றி மேடம்.

காபியின்
மறுபக்கத்தைச்
சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி
நவிலும் விதமாய்
ஒரு கப் காபி
அனுப்பியுள்ளேன்.

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

மின்மினி, நீங்க என்னை அக்கான்னு கூட கூப்பிடலாம். என்னோட ப்ரொஃபைலை கொஞ்சம் பாத்தீங்கன்னா நல்லாருக்கும் :-)))))

வாங்க தெய்வசுகந்தி அக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க அப்துல்காதர் சார் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

வாங்க மதுமிதா @ நன்றி நன்றி கருத்துகளுக்கும் வருகைக்கும்

வாங்க சேட்டை @ ரொம்ப நன்றி அறிமுகத்துக்கு..

பயனுள்ள தகவல் மின்மினி.

நல்ல தகவல்.....

வாங்க அமைதிசாரல் அக்கா @ ரொம்ப நன்றி சுட்டிக்காட்டியதுக்கு.. இனி உங்களை அக்கான்னே கூப்பிடுதேன்.

வாங்க குமார் அண்ணே @ நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

வாங்க சங்கவி @ நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான்//

thanq thanq.. for supporting me dear MINMINI.. hihihi

ரொம்ப நன்றி தேனக்கா..