Monday, May 24, 2010

மங்களூர் விபத்தும் பெண்களும்

அன்புள்ள நண்பர்களுக்கு உங்கள் மின்மினி எழுதும் மடல்.. அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். எவ்வளோ நாளாச்சி பதிவு எழுதி.. ஆனாலும் என் தளத்துக்கு தினமும் வருகைதந்து மின்மினி இன்னக்கி எழுதுவா; நாளைக்கி எழுதுவாள் என்று தினமும் வந்தவர்களை பற்றி நினைக்கும்போது என்னை நானே திட்டிக்கொள்வேன்.

மங்களூரில் விமானவிபத்து ஏற்பட்டு 159பேர் பலி என்ற செய்தியை சனிக்கிழமை காலையில் கேட்டபோது ரொம்பவே மனசு பாதிப்பானது. வெளிநாட்டுல சம்பாதிக்க சென்றவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?. எத்தனை எத்தனை பேர் ரொம்பவே ஆவலுடன் மனைவி மக்களை காண வந்திருப்பார்கள். அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை நினைக்கநினைக்க வேதனையாக உள்ளது. அவர்களின் குடும்பங்களின் நிலையை எண்ணிப்பார்த்தால்?.. இறந்தவர்களுக்கு 5 நிமிடம்தான் மரணவேதனை. ஆனால் அவர்களின் குடும்பங்களுக்கோ காலம்பூராவும் வேதனைதான்.

எப்ப என்னநடக்கும் என்று யாருக்கும் தெரியாது?.. இந்த அவசர யுகத்தில் எல்லாமே அவசரம்தான். யாருக்கும் எப்போதும் பொறுமையே இல்லை. பொதுவா வீட்டுல உள்ள ஆம்பளைங்க வெளியில் கடைவீதிக்கு சென்றால் என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறக்கூடியவங்க நாம். அப்படீருக்கும்போது இந்தமாதிரி சம்ப‌வத்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் மனைவி பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குரியானதே.. அவங்க என்ன பாவம் செய்தார்கள்?..

வெளிநாட்டுக்கு செல்லும் கணவனை தன்னோட நெஞ்சிலே சுமந்து தன் பிள்ளையை வயிற்றிலே சுமந்து கனத்த இதயத்துடன் அனுப்பிவைக்கும் மனைவியின் தியாகத்துக்கு ஈடா எதுவும் உண்டா?.. கணவன் வெளிநாடு சென்றபின் மனைவிகளுக்கு எத்தனை தூங்காத இரவுகள் உண்டு தெரியுமா?.. இந்த சூழ்நிலையில் தன்னையும் கவனித்து தன் பிள்ளைகளையும் கவனித்து குடும்பத்தினரிடையே சகஜமாக அன்னியோன்னியமாக இருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்?..

கணவன் வெளிநாடு சென்றபின் அம்மாவீட்டுக்கும் புகுந்தவீட்டுக்கும் மாறிமாறி ஏதோ வனவாசம் செல்வதுபோல அங்குமிங்கும் செல்லும் பெண்களின் நிலை?.. இதில் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் குழந்தையை கவனிப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் குழந்தை இல்லா பெண்கள்?...


இப்படி ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு எதிர்பார்ப்புகள்? எல்லாம் கேள்விக்குரியானது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மனநிம்மதியையும் நல்ல சூழ்நிலையையையும் தருவான் என்று அனைவரும் பிராத்திப்போமா.. ஆமீன்.

விபத்தில் இறந்த‌வர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்., கண்ணீர் அஞ்சலிகள்.

,

14 கருத்துரைகள்:

மின்மினி நீண்ட நாட்கள் கழித்து பதிவு,மங்களூர் விபத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.வெளிநாட்டு வாழ் கணவர்களை கொண்ட பெண்களின் நிலையும் அழகாக சொல்லி இருக்கீங்க.ஆதங்கம் புரிகிறது,நானும் சில பல வருடங்கள் ஊரில் தனியாக இருந்த அனுபவம் உண்டு.

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மனதில் பாரத்தோடு கண்ணீர் அஞ்சலி மட்டுமே முடிகிறது.

இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள், அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

//எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மனநிம்மதியையும் நல்ல சூழ்நிலையையையும் தருவான்//

ஆமீன்!!

ஆமாம் மின்மினி., நீங்க சொல்வதும் முற்றிலும் உண்மைதான்.

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இறந்தவர்களின் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மனநிம்மதியையும் நல்ல சூழ்நிலையையையும் தருவான் என்று அனைவரும் பிராத்திப்போமா.. Amen.

விபத்தில் இறந்த‌வர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்., கண்ணீர் அஞ்சலிகள்.

mikavum vethanai

be blessed by divine

Nadesan Dubai

மிக வருந்தத்தக்க நிகழ்வு. உயிரிழ‌ந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் குடும்பங்களுக்கு மனவலிமையை இறைவன் கொடுக்கட்டும்.