This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, May 28, 2010

யூத்புல் விகடனுக்கு நன்றிகள்

அன்புமிக்க தோழ தோழியர்களே!! உங்கள் அனைவருக்கும் முதலில் ஸலாம் சொல்லிக் கொள்கிறேன். நான் நேற்று எழுதிய பஸ் பயணம்‍ - கவனிக்க என்ற இடுகையை யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் நேற்று வெளியாகியிருக்கிறது. தேர்ந்தெடுத்த விகடன் குழுவினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எனது தளத்தில் இதுவரைக்கும் 15 இடுகைகளை எழுதி வெளியிட்டுள்ளேன். வலைப்பக்கம் எழுதவந்து இந்த இரண்டு மாதத்துக்குள் என் எழுத்தை பார்த்தும் படித்தும் ஆதரவுகொடுத்து வரும் உங்கள்...

Thursday, May 27, 2010

பஸ் பயணம் - கவனிக்க

நானும் என்கணவரும் அம்மம்மா வீட்டுக்கு விருந்துக்கு தக்கலைக்கு அருகில் உள்ள ஊருக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து காலையில் 7 மணிக்கே கிளம்பினாலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வருவதற்குள் எட்டுமணியாகிவிட்டது. பின்னர் அங்கிருந்த சிற்றுண்டி கடையில் சாப்பிட்டோம். சாவகாசமா நாகர்கோவில் பிளாட்பாரத்துக்கு வந்துப்பார்த்தால் கூட்டம் அலைமோதியது. என்னவென்று விசாரித்ததில் பணகுடியில் கோவில் கொடைவிழாவானதால் பஸ்கள் நிரம்பி வழிந்தன.9.30 மணி தாண்டியும் கூட்டம்...

Monday, May 24, 2010

மங்களூர் விபத்தும் பெண்களும்

அன்புள்ள நண்பர்களுக்கு உங்கள் மின்மினி எழுதும் மடல்.. அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். எவ்வளோ நாளாச்சி பதிவு எழுதி.. ஆனாலும் என் தளத்துக்கு தினமும் வருகைதந்து மின்மினி இன்னக்கி எழுதுவா; நாளைக்கி எழுதுவாள் என்று தினமும் வந்தவர்களை பற்றி நினைக்கும்போது என்னை நானே திட்டிக்கொள்வேன்.மங்களூரில் விமானவிபத்து ஏற்பட்டு 159பேர் பலி என்ற செய்தியை சனிக்கிழமை காலையில் கேட்டபோது ரொம்பவே மனசு பாதிப்பானது. வெளிநாட்டுல சம்பாதிக்க சென்றவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?. எத்தனை எத்தனை பேர் ரொம்பவே ஆவலுடன் மனைவி மக்களை காண வந்திருப்பார்கள். அவர்களுக்கு நேர்ந்த...

Tuesday, May 11, 2010

ஒரு கப் காப்பி கிடைக்குமா?.

அன்புள்ள தோழ தோழிகளே!! அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். இப்போது எந்தநோய் எந்தரூபத்துல வருதுன்னு யாருக்கும் தெரியாது. தினமும் புதுபுது நோய்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த காலத்துல எல்லாம் நிறைய நாட்கள் உயிரோடு இருந்திருக்காங்க. ஏன் நம்மால் அவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்கமுடியவில்லை. எல்லாம் நம்மோட உணவு பழக்கவழக்கங்கள்தான் காரணம் என்று அடித்து சொல்லலாம்.முன்னோர்கள் சாப்பிட்டதுபோல சத்தான உணவுகளை சாப்பிடாததுக்கு நிறைய காரணங்களை சொல்லலாம். இன்றைக்கு...

Tuesday, May 4, 2010

என்ன விலை?..

எங்கோ பெய்யும் மழையின் சாரல் துளியாய் என் மனம்அலைபாயுது அன்பே உன்னாலேபூவாய் மலராய் பெண்மையின்வெட்கம் என்னைத் தாலாட்டுதுஉன்னருகே வர மனம் நாடுதுபேசும் நீ பேசும் அழகுக்காக‌ஒவ்வொன்றையும் விலை பேசுகின்றேன் பேரமில்லாமல்..கவி எழுத பாடல் வரிகள் தேடினேன்வார்த்தைகள் இன்றி மௌன மொழியாய் உன் கண்கள்நடனமாட எனக்கோ ஆனந்தமாய்இதெல்லாம் எப்படி??..விடையாய் நம்முதலாம் சந்திப்பில்....