Monday, August 9, 2010

பதிவுலகில் மின்மினி

ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த தொடர் இடுகை.. அவருக்கு என் நன்றிகள்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.

மின்மினி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இல்லை. இந்த வலைப்பூ ஆரம்பிக்க என் கணவர்தான் காரணம். அவருக்கு பிடித்த பெயரான இந்த பெயரில் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஊக்கம் கொடுத்தார். எனக்கும் பிடித்திருந்தது.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

சும்மா ஆரம்பித்ததுதான்.. சும்மா நேரம் கிடைக்கும்போது சில தளங்களை வாசிப்பேன். சிலர் ரொம்ப நல்லா எழுதுவாங்க.. படிக்க சுவாரசியமாக இருக்கும்.. இதுபோல நாமும் எழுதுவோமே என்று ஆரம்பித்ததுதான்..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நம்முடைய எழுத்துக்களை பிறரிடம் கொண்டு சேர்ப்பது திரட்டிகள்தான்.. மின்மினிக்கும் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் திரட்டிகள்தான் காரணம். தமிழ்மணம், இன்டலியில் மட்டுமே இணைத்துள்ளேன். திரட்டிகளுக்கு என் நன்றிகள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது மன‌துக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. என்னுடைய சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

வீட்டில் நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.. இதன்மூலம் சம்பாதித்ததெல்லாம் கிடையாது.. அப்படி எல்லாம் இருக்கிறதா.. இருந்தா சொல்லுங்க.. ஏன்னா நான் புதுசு. என்ன ஒன்று.. நண்பர்களாக உங்களையெல்லாம் பெற்றிருப்பதைவிட சம்பாத்தியம் என்ன சம்பாத்தியங்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒன்றுதான் வைத்திருக்கிறேன்.. இந்த மின்மினியின் சிந்தனைகள் மட்டுமே..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

எல்லோரையும் போல நானும் வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற ஆவல். கோபமெல்லாம் கிடையாதுங்க..

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன்முதலில் என்எழுத்தை பாராட்டியவர் என் கணவர். அவர் எனக்கு தினமும் சிலபல கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். அவருக்கு என் முதல் நன்றி.. நான் நுழைவாயிலில் நுழைந்தபோது பாராட்டியவர் ஜலீலாக்கா.. எனக்கு முதன்முதலாக விருது கொடுத்து பாராட்டியவர் ஸ்டார்ஜன். ஜெய்லானி, அக்பர் அண்ணன், ஸாதிகா அக்கா, மகராசன் சார், துபாய் ராஜா சார், ஆசியாக்கா, நிஜாமுதீன், மலிக்கா அக்கா, ஹூசைனம்மா, ஸ்டீபன்
எல்கே, மற்றும் இப்போதும் வாழ்த்துகின்ற நீங்கள்.

ஒருவரை நல்லாயிரு என்று என்றுசொல்லி வாழ்த்துவது அவரை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும். உங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் என்னை மேலும் சிறப்பாக எழுத வைக்கும்.

என்னை பெரிதும் கவர்ந்த கமாண்ட் மலிக்கா எழுதிய கமாண்ட் என்னை இப்போதும் "எழுது மின்மினி எழுது" என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

நம் எண்ணங்களில் உதிக்கும் அத்தனையும் எழுத்துக்களாய் கொண்டுவருதல் சிறப்பு.

வலைகுள் புகுந்தாச்சில்ல இனி பின்னிடுங்க மின்மினி.உங்களுக்கெல்லன்று ஒரு வலையை மின்மினி வலை..

மின்மினி
வெளிச்சம்தரும் மின்மினியாய் மட்டும் இல்லாமல். ஒளிவீசும் நட்சத்திரமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

சந்தேகளிருப்பின் தயங்காமல் கேட்கவும். எனக்குதெரிந்தவரை சொல்லித்தருகிறேன்.

ம்ம் தொடருங்கள் யாரங்கே அடியுங்கள் மேளத்தை .மின்மினியின் வருகையை மற்றவலைதளங்களுக்கு கேட்கும்படி..
March 28, 2010 8:07 AM .

ரொம்ப மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்கிறது மலிக்கா அக்கா. ரொம்ப நன்றி.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். இனிவரும் காலங்களில் என்னை பற்றி கட்டாயம் குறிப்பிடுவேன்.

இந்த தொடரிடுகையை எல்லோரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன். யாரும் எழுதவில்லை என்றால் இதனை அழைப்பாக ஏற்றுக்கொண்டு எழுதுங்கள்.

மலிக்கா அக்கா, ஜலீலாக்கா அவர்களை அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன் மின்மினி.

,

20 கருத்துரைகள்:

நல்லாயிருக்கு மின்மினி.சில சமயம் நான் நினைத்ததுண்டு உங்கள் கணவரும் எனக்கு தெரிந்த ப்ளாக்கரோ என்று.

நல்ல பகிர்வு மின்மினி!!

யதார்த்தமான பதில்கள் மின்மினி.

பதிவுலகில் ஜொலிக்க வாழ்த்துகள்.

மின்மினி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. எழுத்தில் யதார்த்தமான நடை. வாழ்த்துகள்.

மின்மினி உலகுக்கு வெளிச்சம் தரட்டும். நல்ல பதில்கள்.

மிக அழகான எதார்த்தமான பதில்கள் தோழி...மேலும் நிறைய எழுதுங்கள் ஆவலாய் இருக்கிறேன்..வாழ்த்துக்கள்

ஏங்க உங்க பேரை சொல்லல பயமா..ஹி..ஹி..

பதில்கள் அருமை.

[நெல்லை மருமகளா:)? நான் மகளும் மருமகளும்.]

அழகான பதிவு. எழுத்தில் வட்டார மொழிவழக்கு அருமை.
வாழ்த்துக்கள் மின்மினி.

தொடர்ந்து இதுபோன்ற நல்ல பதிவை தாருங்கள்.

நிறைய எழுதுங்கள்.தொடர வாழ்த்துக்கள்.

இப்பதிவின் மூலமாவது உங்களின் நிஜப்பெயரை அறியலாம் என்று பார்த்தால்...// இனிவரும் காலங்களில் என்னை பற்றி கட்டாயம் குறிப்பிடுவேன்.
..ஒகே ரைட்டு.நிரைய எழுதுங்கள் மின்மினி.

இந்த பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன்.... . உங்களை உற்சாகமூட்டி எழுத வைக்கும் சக பதிவர்களுக்கு, நீங்கள் நன்றி சொல்லி இருக்கும் விதம், அழகு. எல்லாமே அருமையான பதில்கள்.

தொடர் பதிவ அழகான முறையில் பகிர்ந்து கொண்டீர்கள்.,
ஆனால் கடைசி வரை நிஜப்பெயரை சொல்லல. ஊருக்கு போய் வந்து இப்ப தான் ஓவ்வொரு பிலாக்கா பார்க்கிறேன்.

என்னையும் தெடர் பதிவுக்கு அழைத்து இருக்கீங்க முடிந்த போது எழுது கிறேன்.

எல்லா பதிலும் நல்லா சொல்லியிருக்கீங்க, மின்மினி..
தொடர்ந்து கலக்குங்க.. :)

இப்போதுதான் மின்மினி பார்க்கிறென் இதை. சூப்பர் கலக்கிட்டீங்க.

ஒவ்வருவருக்குள் ஒவ்வொரு திறமை இருக்கும் அதை வெளிப்படுத்தும் தளமாக நம் தளங்கள் அமையவேண்டும். இன்னும் தொடர்ந்து உங்களுக்குள்ளிருக்கும் முழு திறமையினை வெளியுலகிற்க்கு தெரியப்படுத்துங்கள். இறைவனின் துணையுடன்..

என்னையும் அழைத்தமைக்கு நன்றி நோன்பு முடிந்ததும் எழுதுகிறேன் ஓகேவா..

இப்போதுதான் மின்மினி பார்க்கிறென் இதை. சூப்பர் கலக்கிட்டீங்க.

ஒவ்வருவருக்குள் ஒவ்வொரு திறமை இருக்கும் அதை வெளிப்படுத்தும் தளமாக நம் தளங்கள் அமையவேண்டும். இன்னும் தொடர்ந்து உங்களுக்குள்ளிருக்கும் முழு திறமையினை வெளியுலகிற்க்கு தெரியப்படுத்துங்கள். இறைவனின் துணையுடன்..

என்னையும் அழைத்தமைக்கு நன்றி நோன்பு முடிந்ததும் எழுதுகிறேன் ஓகேவா..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.

ஆமை ...நாட்டாமை .

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இல்லை. இந்த வலைப்பூ ஆரம்பிக்க பதினெட்டு பட்டி ஜாமீன் தான் காரணம். ஏன்னா, அவன் என் மக்களுக்கு அதிகமா தொந்தரவு கொடுத்துட்டான்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை அவன் சொரண்டிப் பாத்துட்டான்.அதுனாலே அவனைப் பழிக்குப் பழி வாங்காமல் தூங்கமாட்டான் இந்த நாட்டாமை.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

காடுகரை சுத்தி ஓலைக்கட்டு,விறகு,காமாட்டு மட்டை எல்லாம் பொரக்குனேன்,அதுக்குப் பதிலாத்தான் இந்த மக்கள் என்னை இந்த அரியாசனத்தில் அமர்த்தி இருக்கார்கள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

வாடகை செய்தியை மட்டும்தான் சொல்லுவேன், சொந்த சேதியை பற்றி இதுவரைக்கும் யாருக்கிட்டேயும் சொன்னதுக்கிடையாது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

நான் எழுதி சம்பாதிக்கிறேன் என்று எந்த பயவுல்லை சொல்லுச்சு ? அதை நீங்கள் நிருபித்தால் நான் நாட்டாமை பதவியிலிருந்து இறங்க்கிட்றேன்.
எல்லாம் அந்த பதினெட்டு பட்டி ஜமினோடு வேலைன்னு நினைக்கிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நான் பல சொத்துக்கு சொந்தக்காரன், ஓ ..சாரி ..வலையைப் பற்றிக் கேக்குறியலோ நான் ஒரு வலைக்குமட்டும்தான் சொந்தக்காரன், கல்யாணத்தின் போது மாமியார் வீட்டில் இருந்து வந்தது,நல்ல வலை இது வரைக்கும் ஒருக் கொசுவோடு என்னை கடிக்கவே இல்லை.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

எல்லோரையும் போல நானும் வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற ஆவல். கோபமெல்லாம் கிடையாதுங்க..

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன்முதலில் என்எழுத்தை பாராட்டியவர் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாங்க,ஏன் என்றால் என்னுடையத் தீர்ப்பைக் கேட்டு அவரு மயங்கியே போயிட்டார்னா பார்த்துக்குங்களேன்,அவரு கூட அமெரிக்காவில் வந்து தீர்ப்பு சொல்ல என்னை அழைத்தார் நான் போகவில்லை ஏன்னா அங்கு கருவ மரம் கிடையாது.இந்த தொடரிடுகையை எல்லோரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன். யாரும் எழுதவில்லை என்றால் இதனை அழைப்பாக ஏற்றுக்கொண்டு எழுதுங்கள்.

I am always keeps on talking funny so sorry sister.

எல்லா பதிலும் நல்லா சொல்லியிருக்கீங்க, மின்மினி..
தொடர்ந்து கலக்குங்க.