ஸாதிகா அக்கா அன்போடு அழைத்த தொடர் இடுகை.. அவருக்கு என் நன்றிகள்.1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.மின்மினி2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.இல்லை. இந்த வலைப்பூ ஆரம்பிக்க என் கணவர்தான் காரணம். அவருக்கு பிடித்த பெயரான இந்த பெயரில் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஊக்கம் கொடுத்தார். எனக்கும் பிடித்திருந்தது.3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...சும்மா ஆரம்பித்ததுதான்.. சும்மா நேரம் கிடைக்கும்போது சில தளங்களை வாசிப்பேன். சிலர் ரொம்ப நல்லா எழுதுவாங்க.. படிக்க சுவாரசியமாக...