Tuesday, March 30, 2010

அழகு குறிப்புகள்


ஸ்ப்பா என்னா வெயில்.. ரொம்ப வெயிலா இருக்கு. மாமிகூட ஷாப்‍பிங் போனேன். நல்ல வெயில். இங்கேயே இப்படி இருக்கே.,கல்ப் நாடுகள்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குமாமே ஜலீலா அக்கா. அப்படியா..

இந்த வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரிந்த சில அழகுகுறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


வெயிலில் நம்முகம் வறட்சியாகிவிடாமல் அழகுடன் பொலிவுடன் இருக்க

சிறிதளவு கோதுமை மாவும் 2 ஸ்பூன் சீனியும் எடுத்து இரண்டையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும்.

ஒரு பஞ்ச் வைத்துக் கொள்ளவேண்டும்.

பிசைந்த மாவை நம்முகத்தில் நன்றாக அப்பிக் கொண்டு அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் பஞ்சைக் கொண்டு முகத்தில் ஒட்டி இருக்கும் மாவுத்துகள்களை நீக்கவேண்டும்.

நல்ல குளிர்ந்த தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவினால் நம்முடைய முகத்துக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். முகம் பொலிவு பெறும்.

வெள்ளரிக்காவை வட்டமாக வெட்டி இரு கண்களில் ஒற்றி எடுத்தால் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.


அதுபோல வெயிலில் செல்லும்போது நம் ஆடைகள் சைனிங் போகும். முக்கியமா பர்தா, சேலை கலர் வெளிறிவிடும். அதற்கு துணிகளை துவைப்பதற்கு முன்னால் ஷாம்பூ கரைசலில் சிறிதுநேரம் முக்கி எடுத்து பின்னர் சோப்பு பவுடரில் துணிகளை துவைத்தால் துணிகளின் கலர் மாறாது.


அன்புள்ள தோழிகளே!! இதுபோன்று உங்களுக்கு தெரிந்த அழகுகுறிப்புகளை தெரியப்படுத்துங்கள்.


உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி...


,

49 கருத்துரைகள்:

அட இவ்வளவு எளியையான அழகு குறிப்பா . அருமை.

தொடர்ந்து எழுதுங்கள்.

க‌ட‌லை மாவு கேள்வி ப‌ட்டு இருக்கேன்.. கோதுமை மாவா? புதுசா இருக்கு..

சன்ஷைன் (அவார்ட்)பாத்ததும். வெயில் அழகு குறிப்பா ? மின்மினியம்மா நீங்க பொழச்சுபீங்க!!சீக்கிரம் வாழ்த்துக்கள்!!!!!

கோதுமை மாவு புதுசா இருக்கே!

சாரி த‌ப்பா நினைக்க‌தீங்க‌.. நான் சும்மா காமெடிக்கு தான் அதை எழுதினேன்..அது என்னுடைய‌ குறிப்பாக‌..

செஞ்சுதான் பாக்கனும் ஆனா செய்யனுமே!

நல்ல குறிப்புகள்

மின்னுது மின்னல்

//சிறிதளவு கோதுமை மாவும் 2 ஸ்பூன் சீனியும் எடுத்து இரண்டையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும்.//இந்த டிப்ஸ் புதுசா இருக்கு.நிச்சயம் டிரை பண்ண போகிறேன்...

அழகுகுறிப்பு சூப்பர்.ஈசியாக வீட்டில் உள்ள கோதுமைமாவு,சீனி பூச வேண்டியது தான்.

வாங்க அக்பர் அண்ணே!!

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

வாங்க நாடோடி

இது புதுவிதமான டிப்ஸ்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ஜெய்லானி

நன்றி ஜெய்லானி.. உங்கள் வாழ்த்துக்களுடன் என்பயணம் தொடரும்.

வாங்க மகராசன் சார்

நீங்களும் டிரை பண்ணிபாருங்க.

வாங்க அபுஅஃப்ஸர்

செய்துபாருங்கள் அண்ணே.., தங்கள் வாழ்த்துக்களுடன் என்பயணம் தொடரும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாசத்யா

டிரை பண்ணிபாருங்க அக்கா.., நிச்சயம் பிடிக்கும்.

முதல்வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

வாங்க ஆசியா உமர் அக்கா

டிரை பண்ணிபாருங்க அக்கா.., நிச்சயம் பிடிக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அருமையான அழகுகுறிப்புகள்..

மின்மினி அசத்திட்டீங்க.. தொடருங்கள்.

கோதுமை மாவில் சீனி போட்டு, நெய் சேர்த்து, முட்டை அடித்து, நல்லா கிண்டி விட்டு - பர்பி செஞ்சு .... ஓ...... அழகு குறிப்பா? நான் சமையல் குறிப்போனு நினைச்சேன். ஹி,ஹி,ஹி,ஹி......

வாங்க சித்ரா அக்கா

நல்ல காமெடி பண்றீங்க.., உங்கள் அன்புக்கு நன்றி சித்ரா அக்கா.

மின்மினி தொடர்ந்து அசத்துங்க விருதுபெற்றதுக்கும் வாழ்த்துக்கள்.

டிப்ஸ்கள் சூப்பர்...

வாங்க ஸ்டார்ஜன்

அன்புக்கு நன்றி.

வாங்க மலிக்கா அக்கா

தங்கள் அன்புக்கு மிக்கநன்றி.., தொடர்ந்து கலக்குவோம்.

மின்மினி,

குறிப்பு பெண்களுக்கு மட்டுமா? அல்லது ஆண்களுக்குமா?

ஸ்ரீ....

வாங்க ஸ்ரீ....

ஆண்களும் இதை யூஸ் பண்ணலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ட்ரை பண்றேன்.....

குறிப்புகள் அருமை மின்மினி .

நல்ல குறிப்பு அதுவும் இந்த டைம்ல... நன்றி.

செந்தில்

வாங்க ஜெரி சார்,

ட்ரை பண்ணி பாருங்க..,

வாங்க அம்மு மது

ட்ரை பண்ணிபாருங்க.., நிச்சயம் பிடிக்கும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாங்க செந்தில் சார்

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.., தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தாங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்
வாருங்கள்
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_31.html..

அழைப்புக்கு மிக்க நன்றி மலிக்கா அக்கா.. விரைவில் எழுதுகிறேன்.

நல்ல குறிப்பு மின்மினி.தொடர்ந்து எழுதுங்கள்.

நல்ல குறிப்புகள் மின்மினி.குறிப்பை செயல் படுத்தினால் முகம் மின்மினுங்குமா?

எனக்கும் இது ஒர்க அவுட் ஆவுமா?

வாங்க இர்ஷாத் வருகைக்கு நன்றி

வாங்க ஸாதிகா அக்கா.. நலமா. யூஸ் பண்ணிபாருங்க பார்த்துட்டு சொல்லுங்க.

வாங்க அண்ணாமலை சார்

எல்லோரும் யூஸ் பண்ணலாம்.,டிரை பண்ணிபாருங்க.

தேர்வு அருமை.

தங்களை பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.முடிந்தால் கருத்து
சொல்லவும்.

http://blogintamil.blogspot.com/2010/03/3.html

நன்றி அக்பர் அண்ணே!

வருகைக்கு நன்றி ராஜா சார்

கோடைக்கு ஏற்ற நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள்

கோதுமை மாவும் சர்க்கரையும் புதுசா இருக்குது.

வாங்க குமார் @ கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

வாங்க தெய்வசுகந்தி அக்கா @ கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

கோதுமை மாவா? புதுசா இருக்கு..

வாங்க காஞ்சனா மேடம்

கோதுமை மாவுல டிரை பண்ணிபாருங்க.. அருமையா இருக்கும்.

வாங்க மெல்லினமே மெல்லினமே..

பேரே புதுசா இருக்கு.. எறும்பு கடிக்காம பாத்துக்கோங்க..

ஓ என்னிடம் தான் சொல்றீஙகளா. இப்ப தான் பார்க்கீறேன்.

கோதுமை மாவு நல்ல ஐடியாதான்.

சமையலறையில் தான் இருக்கு அழகு, அந்த பொருட்களை வைத்தே அழகாகிக்கலாம்.