Wednesday, December 8, 2010

சொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அனைவருக்கும் என்னுடைய ஸலாமை சொல்லிக்கொள்கிறேன். பதிவு எழுதாம ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த என்னை ஸாதிகா அக்கா ஒரு தொடர்பதிவு எழுதச் சொல்லி அழைத்துள்ளார்.

பெண்கள் மனதை சொல்லும் பெண்கள் பாடும் மெல்லிசை பாடல்களை தொகுத்து பத்து பாடல்கள் எழுத வேண்டும் என்பது அந்த தொடர்பதிவின் நோக்கம். இதோ நானும் அதே போல என் ரசனைக்கு ஏத்தமாதிரி பத்து பாடல்களை தொகுத்து தந்துள்ளேன். உங்களுக்கும் பிடிக்கும்
என்று
நினைக்கிறேன்.

இதோ அந்த பாடல்களின் அணிவகுப்பு..

1. பாணாக் காத்தாடி ‍- சாதனா சர்க்கம் - யுவன்சங்கர்ராஜா.

காதலனின் கோபம் அறிந்து காதலி தன்னுடைய காதலை ஏற்றுகொள்ள காதலின் வேதனையோடு பாடும் பாடல். யுவன்சங்கர்ராஜாவின் இன்னிசையில் சாதனா சர்க்கம் பாடிய பாடல். கேட்க கேட்க மிக அருமையான பாடல். நீங்களும் ஒரு தடவை கேட்டுப்பாருங்களேன்.

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அது என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்னவென கேட்டேன்.
என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே அன்பே


இரவில் உறக்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேன்டா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அது என்னவென கேட்டேன்....


2. என் ஆசை மச்சான் - சித்ரா - இளையராஜா.

கல்யாண கனவில் இருக்கும் பெண் கணவனின் பெருமைகளையும், கட்டிக்கபோகும் தலைவனின் பெருமைகளை தன்னோட கனவை பாட்டாக பாடும் இந்த பெண்ணின் கானம் கேட்டு அவன் மன்னவனும் அள்ளிச்செல்கிறான். சித்ராவின் மயக்கும் குரலில் இளையராஜாவின் இசைத்தாலாட்டில் என் ஆசை மச்சான் படப்பாடல். ரொம்ப அருமையான பாடல். நீங்களும் கேளுங்களேன்.

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சி
சேதி சொன்ன மன்னவருதான் எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவருதான் அழகு மன்னவருதான்


சேலைமேல சேலை வச்சி சிவத்த பட்டு நூறு வச்சி
ஊருமெச்ச கைப்புடிச்ச ஒரே ஒரு உத்தமரு (2)
வீரபாண்டி தேருபோல பேரெடுத்த சிங்கம்தான்
ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கம்தான்
மாமாவே நீ வேணும் ஏழுஏழு ஜென்மம்தான்

ஆடியில் சேதி சொல்லி....

பூவுக்கூட நார்போல பூமிகூட நீருபோல
மாமன்கூட சேர்ந்திருப்பேன் மதுரைவீரன் பொம்மிபோல (2)
சேலைகூட நூலபோல சேந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடிதந்த சொந்தம்தான்
மாமாவே நீ வேணும் ஏழுஏழு ஜென்மம்தான்

ஆடியில சேதி சொல்லி....

3. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - சித்ரா - எஸ் ராஜ்குமார்.

சிறுவயதிலே தாயை இழந்த ஒரு பெண் தன் அம்மாவோட கழித்த சிறுவயது ஞாபகங்களை தாலாட்டாக தரும் ஒரு பாடல். எஸ் ராஜ்குமாரின் இசையில் சித்ராவின் குரலில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படப்பாடல்.

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகங்கள் தாலாட்டும் (2)
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகங்கள் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகங்கள் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீருற்றும்

ஏதோ ஒரு பாட்டு....

4. சினேகிதியே - சித்ரா - வித்யாசாகர்.

மனம்வாடும் தன் தோழிக்கு ஆறுதலாய் பாடும் பெண்ணின் கானம். சினேகிதியே படப்பாடலில் சித்ரா பேசுகிறார்.

கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணிப்படிகள் தோல்விகள் தானம்மா
நீவந்து துணையாய் நின்றால் சோகங்கள் தீண்டுமா
வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் தானம்மா
சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சிறகம்மா

கல்லூரி மலரே மலரே...

5. பம்பாய் - சித்ரா - ஆர் ரகுமான்.

ஒரு பெண் முதன்முதலாக தன் மனதை கவர்ந்த மன்னவனே பார்த்ததும் அவள் மனம் சிறகடித்து பறக்கிறது. தன் கனவினை பாட்டின் ஊடே தன் காதலனுக்கு தெரியப்படுத்தும் அருமையான பாடல். இசைப்புயல் ஆர் ரகுமானின் இன்னிசையில் சித்ராவின் குரலில் பம்பாய்.


கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக் கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலை பாயும் சிறுபேதை நானோ
உன்பேரும் என்பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ
வாய்பேசவே வாய்ப்பில்லையே வலிதீர வழி என்னவோ

கண்ணாலனே...

6. அழகி - சாதனா சர்க்கம் - இளையராஜா

சிறுவயதில் செல்வாக்காக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து விதியின் வசத்தால் தடம்மாறும் ஒரு பெண்ணின் வாழ்வில் மறுபடியும் வசந்தம் வீசும்போது அவள் மனம் சந்தோசத்தில் சிறகடித்து பறக்கிறது. அழகியின் கானத்தை நீங்களும் ஒருதடவை கேட்டுப்பாருங்களேன். இளையராஜாவின் இசைத்தாலாட்டில் சாதனா சர்க்கம்.

பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி குங்குமம் வந்தம்மா
கேட்டுக்கொள்ள கிட்டவந்து மங்களம் தந்தம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டிவந்த இரட்டைக் குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக்கொண்டு மெட்டொன்று தந்தம்மா

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதன்னை யார் அறிவார்?..
வாழ்க்கை செல்லும் பாதை தன்னை யார் உரைப்பார்?..

பாட்டுச்சொல்லி பாட சொல்லி..

7. உயிரே உனக்காக - எஸ். ஜானகி - இளையராஜா.

சிறுவயதில் மாடமாளிகையில் கூண்டுக்கிளி போல அடைந்துகிடந்த ஒரு பெண், கூண்டைவிட்டு வெளியேறி இயற்கையோடு இயற்கையாய் தன்னை மறந்து பாடும் பாடல். எஸ். ஜானகி அம்மாவின் மயக்கும் குரலில் இசைஞானியின் தாலாட்டில் இதோ ஒரு கானம். கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் என்றும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்நிறம் சிவந்த வானம் என்றும் மிதக்க _ பார்த்து ரசிப்பேன்
வசந்தம் வரும் காலம் விழியில் வண்ணக்கோலம்
கூக்கூ கூக்கூ க்குக்கூ கூக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டு பாடு குயிலே..

பன்னீரில் நனைந்த...


நானும் ஓர் தென்றல்தான் ஊரெல்லாம் சோலைதான்
எங்குமே ஓடுவேன்; நதியிலே நீந்துவேன்;
மலர்களை ஏந்துவேன் எண்ணம்போல் வாழுவேன்
தந்தனதானா தன தந்தனதானா.. இளமைக்காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிக புதுமையானது..

பன்னீரில் நனைந்த..

மாளிகை சிறையிலே வாழ்ந்தநாள் வரையிலே சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது பறந்தது கிளியே
தந்தனதானா தன தந்தனதானா.. நிலமும் நீரும் இந்த
அழகுச்சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்

பன்னீரில் நனைந்த...

8. சிப்பிக்குள் முத்து - எஸ். ஜானகி - இளையராஜா

சிறகொடிந்த பறவைபோல இருந்த தன்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த தன் கணவனுக்கு நன்றி சொல்கிறாள் இந்த பெண். தன் கணவனை ஒரு அன்னைபோல காத்து தாலாட்டு பாடுகிறாள். இந்த தாலாட்டுக்கு தன்னோட கொஞ்சும் குரலால் எஸ்.ஜானகி அம்மா நம்மை தாலாட்டுகிறார். இளையராஜா இளையராஜா தான். நீங்களும் அந்த தாலாட்டில் சேர்ந்து உறங்குங்கள். இனிமையான இசையில் ஒரு தாலாட்டு.

லாலி லாலி லால்லி லாலி லாலி..
வரம்தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி (வரம்..)

லாலி லாலி லால்லி லாலி லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி (2)
ஜகம்போற்றும் தேவனுக்கு வகையான லாலி (2)

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ..

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே (2)
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே (2)
கருயானை முகனுக்கு மலையன்னை நானே (2)
பார்போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (2)

லாலி லாலி லால்லி லாலி லாலி

வரம் தந்த..

9. காக்க காக்க - பாம்பே ஜெயஸ்ரீ - ஹாரீஸ் ஜெயராஜ்.

கணவனின் அழகையும் அவனின் குணத்தையும் தன்னோட கனவை பாடலில் வெளிப்படுத்தும் மனைவியின் பாடல். ஹாரீஸ் ஜெயராஜின் மயக்கும் இசையில் பாம்பே ஜெயஸ்ரீயின் பாடல் அருமை. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே
ஒருநாள் போதுமா அன்பே இரவே கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீங்குமா..

என்கனவில் ஆஆ.. நான் கண்ட ஆஆ..
நாள் இதுதான் கலாபக்காதலா..
பார்வைகளால் ஆஆ.. பல கதைகள் ஆஆ..
பேசிடலாம் கலாபக்காதலா..

ஒன்றா இரண்டா....

பெண்களை நிமிர்ந்து பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான் நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் புயல் மழை அடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும்
மடகாசம் சிந்தும் உன்முகம், மரணம் வரையில்
நெஞ்சில் நின்று தங்கும்
உனது கண்களில் எனது கனவினை கானப் போகின்றேன்.

ஒன்றா இரண்டா..

10. தாஜ்மகால் - சுஜாதா - ஆர் ரகுமான்

காதலனின் வரவுக்காக காதலி பாடும் பாடல். சீக்கிரம் வந்து கல்யாணம் செய்து கொள்ள காதலனை அழைக்கிறாள்.. அவன் வந்தானா?..

இசைப்புயல் ஆர் ரகுமானின் இன்னிசையில் சுஜாதா பாடிய பாடல் தாஜ்மகால் படத்துக்காக.. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

அடி நீ எங்கே அடி நீ எங்கே, நீ எங்கே நீ எங்கே..
பூச்சூடும் நாள் எங்கே, தாலிகட்ட கழுத்து அரிக்குதே..
இந்த சிறுக்கிமக உசிரை உறிஞ்சிக் குடிக்க
அந்த முரட்டுப்பயலும் வருவானா... (2)

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு
குடை எதும் வேணாம் வா மாயா..
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளம் கொட்டி மேளம் கொட்டி வா மாயா..

அடி நீ எங்கே அடி நீ எங்கே நீ எங்கே
பூச்சூடும் நாள் எங்கே, தாலிகட்ட கழுத்து அரிக்குதே..
இந்த சிறுக்கிமக உசிரை உறிஞ்சிக் குடிக்க
அந்த முரட்டு பயலும் வருவானா..
இந்த சேலை வாங்கிக்கொண்டு,
இந்த சேலை சொந்த சேலை தருவானே..

சொட்ட சொட்ட..


அனைத்து பாடல்களும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த தொடர்பதிவை தொடர நினைப்பவர்கள் தொடரலாம்.

என்றும் அன்புடன்

மின்மினி RS.

,

21 கருத்துரைகள்:

Super Collection.

Adikkadi ezhuthungal... neenda naal achchu...

அழகான தேர்வுகள்...
பாடல் வரிகள் தந்ததற்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு :)

நல்ல தொகுப்பு

உங்க விளக்கங்கள் செம அருமை

அட நம்ம மின் மினியா ?அசத்திட்டீங்க,ரொம்ப நாளாய் ஆளே காணோமேன்னு பார்த்தேன்,பாடல்கள் அனைத்தும் அருமை.

பாட்டும் விளக்கமும் சூப்பர்

எல்லா பாடல்களும் சூப்பர்

அருமையான தொகுப்பு.விளக்கமும் அருமை.நன்றி மின்மினி.

அனைத்து பாடல்களும் அருமை.

அருமையான பாடல்களும் விளக்கமும் அருமை மின்மினி

வ அலைக்கும் வஸ்ஸலாம்
அவரைக்காய் கூட்டுக்குப் பிறகு இப்பத்தான் பார்க்கிறேன், பாட்டு செலக்சன் நல்லா இருக்கு சின்னப் புள்ளைகதான் பாட்டுப் போட்டி வச்சு விளையாடுதுன்னு பார்த்தால்......இப்போ எல்லோருமே ஆரம்பிச்சாட்டாக.
பரவா இல்லை இனி அடுத்தப் பதிவு "அ"வில் தொடங்கும் படப் பெயர்களை எழுதச் சொன்னாலும் சொல்லுவார்கள் எதுக்கும் ரெடியா இருங்கள் மின்மினி.
உதாரணம் : அந்நியன்,அடுத்த வாரிசு,அன்பே வா,அச்சமில்லை அச்சமில்லை என்று.
ரொம்ப நாளைக்குப் பிறகு பதிவு இட்டதிற்கு வாழ்த்துக்கள்

all are too good songs... I like them too.. evergreen songs...thanks for sharing the lyrics (hard to find often)...thanks

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

நல்ல பாட்டு செலக்‌ஷன். எனக்கும் சித்ரா பாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும். என் தோழி என்று சொல்லிகொளவதில் பெருமை.

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அது என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்னவென கேட்டேன்.
என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே அன்பே


இரவில் உற‌க்கம் இல்லை பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்‌
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேன்டா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அது என்னவென கேட்டேன்..../////

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது :)

அனைத்து பாடல்களையும் நன்றாக தேர்வு செய்து உள்ளீர்கள்..

மின்மினி நலமா?
என் பழைய ஐடி கிடையாது, அதை கேன்சல் பண்ணிட்டு இதில் இனைந்து கொள்ளுங்கள்

நல்ல தொகுப்புங்க.. எனக்கு "லாலி லாலி.." சாங் ரொம்ப ரொம்ப பிடிச்ச.....சாங்.

பகிர்வுக்கு நன்றி.. :)

பாடல் தேர்வுகளைக் கண்டு அசந்துவிட்டேன்...! உங்கள் ரசனைக்கு ஆயிரம் சலாம்கள்.

மின்னு உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுதியுள்ளேன்
வந்து நோக்குங்கோ..

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html