அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அவரைக்காய் கூட்டு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
அவரைக்காய் 1/2 கிலோ
தக்காளி 2
தேங்காய் அரை முறி
சீரகம் 2 ஸ்பூன்
வெள்ளைப்பூடு 3 அரிசி
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 2
மஞ்சள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம்பருப்பு, கொஞ்சம் வெங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை.
தேங்காய், சீரகம், பூடு, சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அவரைக்காயை நன்றாக கழுவி அதன் முனையிலுள்ள நரம்பு எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
தாளிக்க வேண்டிய பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக வதங்கியதும் அவரைக்காயை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும்.
அந்த கலவையில் மிக்ஸியில் அரைத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் தம்மில் வேக வைக்கவேண்டும்.
அவரைக்காய் வெந்ததும் கிளறிவிட்டு பரிமாறலாம்.
சுவையான அவரைக்காய் கூட்டு ரெடி. நீங்களும் செய்து சாப்பிடுங்க.
,
11 கருத்துரைகள்:
சூப்பர் படங்களுடன், ரெசிபி. நன்றி.
nalla irukku
nice recipe!!
ஆஹா அவரைக்காய் அருமை!!
அருமையோ அருமை.படங்கள் அழகு.
அவரக்காய் பொரியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இது புதுமையாய் இருக்கு. படத்துடன் விளக்கம் அருமை.
பச்சை பசேல் என்ற அவரைக்காயின் பசுமை நிறம் மாறாமல் அழகாக சமைத்து இருக்கின்றீர்கள் மின்மினி.
அவரக்கா..எக்கக்கா ..என்னக்கா....எல்லாமே எனக்குத்தாக்கா....அவரைக்கா எவர் அக்கா ?
கூட்டும் அதைக்கூட்டிய விதமும் அருமை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,
Nice sharing..
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html
தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்
Post a Comment