முதலாய் நானே
முடிவுவரை நானே
ஒவ்வொரு மொழியை
அறிவதும் நானே
உன் செல்ல
கோபங்கள் எனக்கு
மகிழ்ச்சியே தருமே
நான் தரும் இன்பங்கள்
உனக்கு இன்பமாய்
நீ தவறிழைக்கையில்
என் கோபமெல்லாம்
நீ வருந்தும்போது
செல்லமாய் உன்மேல்
நீ என்னை நினைக்கையில்
நான் உன்னருகிலே
கவிதை வரிகளுக்கும்
அப்பாற்பட்டது நம் உறவு
நாளும் நலம் பெற
நாடியவன் அருள் புரிவான்.
,
21 கருத்துரைகள்:
எடுத்த உடனேயே கவிதையா... கலக்குங்க.
//உன் செல்ல
கோபங்கள் எனக்கு
மகிழ்ச்சியே தருமே//
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.
அழகு..,
அசத்தல் கவிதை
இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
கவிதை அழகு.அசத்த ஆரம்பித்துவிட்டீர்கள்.வலைஉலகில் மிணுங்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ஜசகல்லாஹு ஹைர்
ஆரம்பமே கவிதையா சூப்பர் ம்ம் அருமை அருமை வாழ்த்துக்கள்
நீ வருந்தும்போது
செல்லமாய் உன்மேல்
வாவ்.. ப்ரியம் கொப்பளிக்கிறது..
அருமை வாழ்த்துக்கள்
இனிய எளிய கவிதை. அருமை.
வாழ்த்துக்கள் மின்மினி.
எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.
நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் நாளே என்னை வாழ்த்தி கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
அக்பர் அண்ணா @ நன்றி
மகராசன் சார் @ நன்றி
டாக்டர் சுரேஷ் சார் @ நன்றி
அபு அஃப்ஸர் சார் @ நன்றி
ஸாதிகா அக்கா @ நன்றி
ஜலீலா அக்கா @ நன்றி
மதுரை சரவணன் சார் @ நன்றி
துபாய் ராஜா சார் @ நன்றி
ஜெரி சார் @ நன்றி
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
முதல் தடவையாக வந்துள்ளேன். நல்ல கவிதை அதை படித்தவுடம் பதிவு போட தோன்றியது. ஜலீ தளத்தின் வழி வந்தேன் நல்ல கவிதை. மேலும் மேலும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.
நிங்களும் வாங்க வாங்க என்று அன்புடன் அழைக்கிறேன்.
வாங்க ரசிதா
முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க விஜி அக்கா
உங்கள் தளம் சென்றுபார்த்தேன்.., நிறைய தகவல்கள்..
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
தொடர்ந்து வாருங்கள்.
ஆரம்பமே அசத்தலா இருக்கு.ம்...வாழ்த்துக்கள்...........
வாங்க ஜெய்லானி அண்ணே!
முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி//
முதல் வருகையா!!!!!!.நீங்க நேத்து கடைய திறந்ததும். வந்த ஐந்தாவது ஆள் நாந்தாங்க.........>>>
அய்யயோ மறுபடியும் சாரி ஜெய்லானி.
நான் கவனிக்கல..
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி.
மின்மினி கவிதை கூட சூப்பராகத்தான் இருக்கு,இப்ப தானே பார்த்தேன்.
வாங்க ஆசியா உமர் அக்கா
மிக்க மகிழ்ச்சி.., எனக்கு ரொம்ப சந்தோஷம்.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
Post a Comment