ஸ்ப்பா என்னா வெயில்.. ரொம்ப வெயிலா இருக்கு. மாமிகூட ஷாப்பிங் போனேன். நல்ல வெயில். இங்கேயே இப்படி இருக்கே.,கல்ப் நாடுகள்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குமாமே ஜலீலா அக்கா. அப்படியா..
இந்த வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரிந்த சில அழகுகுறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வெயிலில் நம்முகம் வறட்சியாகிவிடாமல் அழகுடன் பொலிவுடன் இருக்க
சிறிதளவு கோதுமை மாவும் 2 ஸ்பூன் சீனியும் எடுத்து இரண்டையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும்.
ஒரு பஞ்ச் வைத்துக் கொள்ளவேண்டும்.
பிசைந்த மாவை நம்முகத்தில் நன்றாக அப்பிக் கொண்டு அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் பஞ்சைக் கொண்டு முகத்தில் ஒட்டி இருக்கும் மாவுத்துகள்களை நீக்கவேண்டும்.
நல்ல குளிர்ந்த தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவினால் நம்முடைய முகத்துக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். முகம் பொலிவு பெறும்.
வெள்ளரிக்காவை வட்டமாக வெட்டி இரு கண்களில் ஒற்றி எடுத்தால் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.
அதுபோல வெயிலில் செல்லும்போது நம் ஆடைகள் சைனிங் போகும். முக்கியமா பர்தா, சேலை கலர் வெளிறிவிடும். அதற்கு துணிகளை துவைப்பதற்கு முன்னால் ஷாம்பூ கரைசலில் சிறிதுநேரம் முக்கி எடுத்து பின்னர் சோப்பு பவுடரில் துணிகளை துவைத்தால் துணிகளின் கலர் மாறாது.
அன்புள்ள தோழிகளே!! இதுபோன்று உங்களுக்கு தெரிந்த அழகுகுறிப்புகளை தெரியப்படுத்துங்கள்.
உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி...
,