Tuesday, October 12, 2010

தேடல்..


கண்டநாள் முதல் இன்றுவரை
தேடலில் என் கண்கள் பூத்து
போயிருக்கின்றன உன் வரவை
எண்ணி எண்ணி
மனசுக்குள் மத்தாப்பாய்..

என் கைவிரல்கள் அசைவில்
நீயிட்ட முத்தமும் உன்
அரவணைப்பும் என்னை
தாலாட்டுகின்றன..

ஓயாது உன் ஞாபகம்
புரண்டு புரண்டு படுக்கையில்
நீ பேசும் காதல் மொழியும்
என்னுடன் கொஞ்சிய‌
இரவுகளும், சொர்க்கம்
கண் முன்னே தெரிகின்றனவே..

நிஜமாய் நினைவலைகள்
வட்டமிட்டால் ஆனந்தமே..
இனிய நினைவுகளே!!
செல்லுங்கள் என் மன்னவனிடத்தில்..
அவன் வரும் நாளை
அறிந்து சொல்லுங்கள்..

,

9 கருத்துரைகள்:

அருமையான கவிதை. :-)
அடிக்கடி எழுதுங்க.

அட்டகாசமான கவிதை.

//ஓயாது உன் ஞாபகம்
புரண்டு புரண்டு படுக்கையில்
நீ பேசும் காதல் மொழியும்
என்னுடன் கொஞ்சிய‌
இரவுகளும், சொர்க்கம்
கண் முன்னே தெரிகின்றனவே..//

ரொம்ப புடிச்சிருக்கு இவ்வரிகள்...

கவிதை வரிகளில் பிரிவின் தாக்கத்தை பிழிந்தெடுத்துவிட்டீர்கள் மின்மினி.

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

//நிஜமாய் நினைவலைகள்
வட்டமிட்டால் ஆனந்தமே..//

ஆமாம் சரியா சொல்லிடீங்க ....எப்படி உங்க கவிதையை, உங்கள் தளத்தை இத்தனை நாளா நான் மிஸ் பண்ணினேன் ....? 50 வதா தொடர வந்திட்டேன் தோழி.

//நெல்லை// same blood...!! :)) .

கவிதை வழி பிரிவின் வலி.
நம்று.

மன்னவனின் தேடலில் வந்த எண்ண அலைகள் நல்லா இருக்குங்க.. :-))